Thursday, May 13, 2021

தங்க வேட்டையில் களமிறங்கிய போட்டியாளர்கள் - பிக் பாஸ் நாள் 24

by Mahadevan CM Oct 28, 2020, 15:35 PM IST

பொன்மகள் வந்தாள் பாட்டு போட்டாங்க. இந்த பாட்டுக்கு என்ன ஸ்டெப் போடறதுனு எல்லாரும் கன்ப்யூஸ்ல இருந்தாங்க. ரம்யாவும், சம்முவும் மட்டும் ஜோடியா சூப்பரா ஆடிட்டு இருந்தாங்க.

காலையிலேயே அனிதா பஞ்சாயத்து ஆரம்பிச்சாச்சு. கூட ஆரி வேற. ஒரு படத்துல வர டயலாக் ஒன்னு தான் ஞாபகம் வந்தது. இதுல ஒருத்தன் வந்தாலே ஒன்னுக்கு போகற அளவுக்கு அடிப்பான். ரெண்டு பேரும்னா மோஷன் போகற அளவுக்கு அடிப்பாங்களே. டயலாக் தான் அது. அடங்கப்பா. ரெண்டு பேரும் விவாதத்தை முடிக்க தெரியாதவங்க. அனிதா என்ன சொன்னானும், நானும் அதை தாம்மா சொல்றேன்னு ஆரி பேசறாரு. ஆரி என்ன சொன்னாலும், நீ என்னை கன்ப்யூஸ் பண்றீங்க, இருங்க நான் முதல்ல இருந்து வரேன்னு இந்த பொண்ணு ஆரம்பிக்குது. முடியல.

சாதாரணமா நாமினேஷனுக்கு யாராவது காரணம் சொன்னாலே, நம்ம பேர் கெட்டு போய்டுமேனு பயந்து அதை பத்தியே யோசிக்கற அனிதா, இந்த மேட்டர்ல குழப்பமா இருக்காங்க. யாருப்பா அது? "அனிதா எப்ப தெளிவா இருந்ததுனு கேக்கறது." சுரேஷ் தன்னோட மன்னிப்பை புறக்கணிச்சதால வந்த குழப்பம். எங்க இதுல சுரேஷ் ஸ்கோர் பண்ணிடுவாரோனு கூட இருக்கலாம்.

ஆரி கிட்ட பேசிட்டு போன கொஞ்ச நேரத்துல பாத்ரூம்ல உக்காந்து அழுதுட்டு இருந்தாங்க அனிதா. பிக்பாஸ் ஒரு கேம் ஷோ தான். அதுக்காக எல்லா உணர்ச்சிகளையும் போலினு ஒதுக்கிட முடியாது. அன்னிக்கு சுரேஷ் அழுத போது அவரை பிடிக்காதவங்க, அந்த அழுகை பொய்னு சொன்னாங்க. இன்னிக்கு அனிதாவை பிடிக்காதவங்க இந்த அழுகையை பொய்னு சொல்றாங்க. இந்த கேம்ஷோல சில நேரங்கள்ல நடிப்பு இருக்கலாம். ஆனா தொடர்ந்து யாரும் நடிக்க முடியாது. பாத்ரூம்ல அழுதுட்டு இருக்கும் போது நிஷா போய் சமாதானபடுத்தறாங்க.

"சனம், வாடா போடானு சுரேஷை திட்டினாங்க, அவங்க சாரி சொல்லும் போது ஏத்துக்கறாரு, ஆனா நான் சாரி சொன்னா ஏத்துக்க மாட்டேங்கறாரு" "நான் செஞ்சது அவ்வளவு பெரிய தப்பானு நிஷாகிட்ட அழுதுட்டே பேசிட்டு இருந்ததை வெளிய சனம் கேட்டுட்டே இருந்தாங்க. ரைட்டு.... நிஷா உள்ள அழுதுட்டு இருந்த போது வெளிய ரெண்டு பேர் குட்டைப் பாவாடையோட வந்து நின்னாங்க. அதுல ஒருத்தர் ஷிவானி, இன்னொருத்தர் யாரா இருக்கும்னு பார்த்தா நம்ம சம்மு.... ஆனா உண்மை என்னான்னா நான் யாரை ஷிவானினு நினைச்சேனே அவங்க தான் சம்மு... இதிலிருந்து என்ன தெரியுது.... ஹி ஹி ஹி..

வெளிய வந்ததுல இருந்து மறுபடியும் ஆரி கூட ஆர்கியுமெண்ட். அப்ப ஷிவானியும், சம்முவும் வந்து எங்க சப்போர்ட்டும் உனக்கு தான் சொன்னாங்க. அப்ப அங்க வந்த பாலா தெளிவா ஒரு விஷயம் சொன்னான். நீ பேசினது உனக்கு ரைட்டுனு தோணுதில்ல, அப்ப யாரை பத்தியும் கவலைப்படாதனு சொன்னாரு. அதை கேட்டுட்டு, எனக்கு பாலா மாதிரி யாரும் ஸ்ட்ராங்கா சப்போர்ட் பண்ணலனு ஆரம்பிச்சுது... அய்யய்யோ.... என்னை உட்ருங்கடா.......

அழுது வீங்கின முகமோட கன்பெஷம் ரூம் வந்த அனிதாவுக்கு ஆறுதல் சொன்னாரு பிக்பாஸ். அனிதாவோட கணவர் பத்தி பேசும்போது, கன்னுக்குட்டியை கேட்டதா சொல்லச் சொன்னாரு பிக்பாஸ் சொல்லவும். முதல்ல சிரிப்புல ஆரம்பிச்ச அனிதா அப்புறம் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிச்சாங்க. கண்டிப்பா அது நடிப்பு கிடையாது. அனிதாவை வெறுக்கறவங்க கூட ஒரு நொடி அனிதாவுக்காக பீல் பண்ணிருப்பாங்க.

அடுத்து தங்கச் சுரங்கம் செட் போட்ருந்தாங்க. நாலு பேர் டீமா போய் மேக்சிமம் தங்கத்தை அள்ளனும். முதல் டீமா பாலா, சம்மு இன்னும் ரெண்டு பேர் போனாங்க. சரியா பெல் அடிக்கும் போது, தங்கம் எடுக்க எதையும் எடுத்துட்டு போகக் கூடாதுனு சனம் அப்ஜெக்ட் செஞ்சாங்க. அப்ப கொஞ்சமா ஆர்கியூ பண்ணிட்டு உள்ள போய்ட்டாங்க.உள்ள போய்ட்டு வந்த உடனே பாலா சாமியாட ஆரம்பிச்சான். எல்லாத்துலேயும் மூக்கை நுழைக்காதனு திட்டிட்டு இருக்கும் போது, இன்னொரு கலகக்குரல். யார்ர்ரா இதுனு பார்த்தா நம்ம சம்மு. இருக்கற இடமே தெரியாம இருந்த சம்முவையே கோபப்பட வச்சுருச்சே இந்த சனம்.. சனம், பாலா, சம்மு மூணு பேரும் மாடலிங் பீல்டுல ஏற்கனவே ஒருத்தருக்கொருத்தர் தெரியும்ங்கறது இங்க கூடுதல் தகவல்.

அடுத்ததடுத்த நாலு டீம் போய்ட்டு வந்தது. எல்லாரும் தங்கத்தை சேப்டி செஞ்சு வச்சுக்கனும்னு ஏற்கனவே பிக்பாஸ் சொல்லிருந்தாரு. ஆனா ஊருக்கே அட்வைஸ் பண்ற ஆரி, தங்கம் கலெக்ட் செஞ்ச பையை வெளிய தெரியறா மாதிரி வச்சுட்டு பெப்பெரப்பேனு தூங்கிட்டு இருக்க, அந்த பக்கம் சுரேஷ் அலுங்காம பையோட அடிச்சுட்டாரு. இதுல ஆஜித்தும் கூட்டாளி. அப்புறமா எந்திரிச்சு வந்து ஷிவானி கிட்ட கேக்கவும், உண்மையை சொல்லிடுச்சு ஷிவானி.

பாலா கிட்ட இருந்து தங்கத்தை திருட வந்த போது ஆர்ம்ஸ் காட்டியே மிரட்டி அனுப்பிட்டான். ஷிவானியும் திருட வலுகட்டாயமா பிடுங்கிட்டான். ரமேஷும், ஆஜித்தும் அனிதா கிட்ட திருடப் போக, அப்ப அனிதா கொடுத்த சவுண்டுக்கு சின்ன குழந்தைங்களே தோத்துரும்.

ஆஜித், கேப்பி ரெண்டு பேரும் வேற யார்கிட்ட இருந்தோ தங்கத்தை திருடிட்டு வர, அதை வாங்கி பத்திரபடுத்தி வைக்கறாரு பாலா. நைட் லேட்டாகுது, பாலா படுத்து தூங்கிட்டு இருக்க, அந்த பக்கம் ரியோ கூட பேசிட்டு இருந்த அர்ச்சனா அதை பார்த்துட்டாங்க. நேத்தும் இதே மாதிரி பாலா தூங்கிருக்காரு போல, ஆனா நாய் குரைக்கல. ரெண்டு நாளா இப்படி நடக்குதேனு பேசிட்டே, வேல்ஸ் கிட்ட போய்ட்டு, லிவிங் ஏரியாவை க்ளீன் பண்ணச் சொல்றாங்க. கூடவே பாலா தூங்கிட்டு இருக்கறதையும் சேர்த்து சொல்றாங்க.

வேகமா போன வேல்ஸ் பாலாவை எழுப்ப முயற்சி செஞ்சாரு, ஆனா பாலா எழுந்திரிக்கவே இல்லை. இதை அப்படியே விட்ருந்தா யாருக்கும் பிரச்சினையில்லை. லைட் ஆஃப் செய்யற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடியே தூங்கிட்டாரு பாலா. வேல்ஸ் தான் க்ளீனிங் டீம் கேப்டன். அவர் கூட இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க. சோ வேல்ஸ் பார்த்து முடிவு பண்ணிருந்தா, அவங்க 3 பேருமே க்ளீன் பண்ணி முடிச்சுருக்கலாம்.

ஆனா அர்ச்சனா வேல்ஸை யோசிக்கவே விடலை. பாலா தூங்கறதை பெரிய விஷயமா பேசி, கொஞ்சம் டென்ஷன் பண்ணி விட்டுட்டாங்க. இப்போ ஆஜித்தை அனுப்பி பாலாவை எழுப்ப சொல்ல, ஆஜித்தும் போய் தட்டி எழுப்பறான். க்ளீனிங் வேலை இருக்கு செய்யனும்னு ஆஜித் சொல்லவும், இன்னிக்கு என்னால முடியல, நீங்க செய்ங்கனு ஆஜித் கிட்ட சொல்றாரு பாலா. அதை வெளிய வந்து வேல்ஸ் கிட்ட சொல்லவும் மறுபடியும் அர்ச்சனா உள்ள புகுந்து ஒரு சீன் கிரியேட் செய்யறாங்க. தூக்கத்துல எந்திரிச்சு பாலாவுக்கு அர்ச்சனா பேசறது கேக்குது. முக்கியமா உடம்பு மட்டும் முடியல, ஆனா எட்டி பார்க்க முடியுதோ? னு அர்ச்சனா கேட்டது, பாலா காதுல தெளிவா விழந்துருச்சு.

கேப்டன்னா என்ன கொம்பா முளைச்சுருக்குனு கேட்டுட்டே, வெளிய வந்தாரு பாலா. "நான் கேப்டனா இருந்தபோதும் இதையே தான் சொன்னே" அப்படினு சுரேஷ் குரல் கொடுத்தாரு. நான் கேட்டேனா முருகேசா?

வெளிய வந்து வேல்ஸ் கிட்ட பேசிட்டே வெறியோட க்ளீன் பண்ண ஆரம்பிச்சாரு. உண்மையிலேயே பாலாவை எழுப்பிருக்க வேண்டியதில்லை. க்ளீனிங் வேலை முடியனும்னு சொல்றதுக்கு கேப்டனா அர்ச்சனாவுக்கு அதிகாரம் இருக்கு. அந்த டீம்ல இருக்கற எல்லாரும் செய்யனும்னு சொல்ல அர்ச்சனாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. தேவையே இல்லாம பாலாவை வம்புக்கிழுத்து வாங்கி கட்டிகிட்டாங்க. தூக்கத்துல எந்திருச்ச கோபத்துல நான் கேப்டன் ஆனா எல்லாரையும் அம்மி அரைக்க வைக்கறேன்னு சொன்னதை அர்ச்சனா & டீம் பிடிச்சுகிட்டு அதை வச்சு பாலாவை கார்னர் பண்ண பார்த்தாங்க. ஆனா பாலா எதுக்கும்பிடி கொடுக்கல. அர்ச்சனாவுக்கு ஆதரவா களமிறங்கின ரியோவுக்கும் மூக்குடைப்பு தான்.

இந்த பிரச்சனை என்னாகுதுனு இன்னிக்கு பார்ப்போம்.

You'r reading தங்க வேட்டையில் களமிறங்கிய போட்டியாளர்கள் - பிக் பாஸ் நாள் 24 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

அண்மைய செய்திகள்