Thursday, May 13, 2021

ஜெயிலுக்கு போகும் பாலா - சுசித்ரா ,பாலாவின் கோபம் , இந்த வார கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெறுவது யார்? - பிக் பாஸ் நாள் 48

by Mahadevan CM Nov 21, 2020, 11:55 AM IST

கருத்தவன்லாம் கலீஜாம் பாடலோடு ஆரம்பித்தது நாள். கடமைக்கு ஆடிட்டு இருந்தாங்க. சனம் ஆடினதை மட்டும் தனியா பார்க்கனும்யா...

மார்னிங் டாஸ்க்ல ஹவுஸ்மேட்ஸ் பத்தி சுச்சி பாட்டு பாடனும்னு நினைக்கிறேன். ரம்யாவை பத்தி ஒரு பாட்டு பாடினாங்க. அடுத்ததா அனிதாவுக்காக ஒரு பாட்டு பாட அதுக்கு அனிதாவே டான்ஸ் ஆடின சம்பவம் நடந்துச்சு. நேத்து மார்னிங் டாஸ்க்ல அனிதாவை பத்தி அர்ச்சனா பேசிட்டு இருந்த போது, ரொம்பவும் அசுவாரஎயமா இருந்து பழிப்பு காட்டின அனிதா, இன்னிக்கு தன்னை பத்தின பாடலுக்கு டான்ஸ் ஆடினது ஆச்சரியம் தான்.

இந்த வாரம் வொர்ஸ்ட் பர்பாமர்ஸ் ஜெயிலுக்கு போக வேண்டிய நேரம். மணிக்கூண்டு டாஸ்க்ல கடைசி இடம் பிடித்த பாலா, சுச்சி, ரம்யா மூணு பேர்ல இருந்து யாராவது ரெண்டு பேரை செலக்ட் செய்யனும்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டாரு பிக்பாஸ். இவன் ஜெயிலுக்கு போனா தான் திருந்துவான்னு பிக்பாசே முடிவு பண்ணிட்டாரு போலருக்கு. பாலா, சுச்சி ரெண்டு பேரும் செலக்ட் ஆனாங்க. தன் பேர் தான் சொல்லப் போறாங்கனு தெரிஞ்ச உடனே பாலா ரப்சர் பண்ண ஆரம்பிச்சுட்டான். மணிக்கூண்டு டாஸ்க், கடைசி இடம், பேர் வரைக்கும் சொன்னதுக்கு அப்புறமும், அதுல சந்தேகம் கேட்டுட்டு இருந்தாரு பாலா. மணிக்கூண்டு டாஸ்க் மட்டுமா, இல்லை வாரம் முழுவதுமானு பிக்பாஸ் கிட்ட கேளுனு ஆஜித்தை மிரட்டிட்டு இருந்தான். அதுக்கு பதில் சொன்ன சனம், சுச்சி மேல எறிஞ்சு விழுந்தான்.

நிஜம் சுடும்னு சொல்லுவாங்க இல்லையா. அதுக்கு உதாரணம் இதுதான். இந்த வீட்ல ஆரம்பத்துல இருந்தே டாஸ்க் நல்லா செய்யக்கூடிய சிலர்ல பாலா முதல் இடத்துல இருந்தார். உடல் பலமா இருந்தாலும் சரி, அறிவுப்பூர்வமா இருந்தாலும் சரி எந்த டாஸ்க் கொடுத்தாலும் நல்லா தான் செஞ்சுட்டு இருந்தாரு. சாம் கேப்டனானது வரைக்கும் அவரோட பங்கு சிறப்பாவே தான் இருந்தது. ரியோவை கேப்டன் ஆகினது, சாம் கேப்டன் ஆனதுக்கு நான் தான் காரணம்னு பெருமையா பேசிட்டு இருந்தாரு. சாம் கேப்டன்சில, சனம் கூட வந்த சண்டைக்கு அப்புறம் டிஸ்ட்ராக்ட் ஆக ஆரம்பிச்சாரு பாலா. அந்த வாரம் டாஸ்க் நல்லா செஞ்சாலும், மைக் மாட்டாதது, காலை டான்ஸ்க்கு வராததுனு நிறைய ஒழுங்கீனங்கள். உண்மையில அந்த வாரம் ஆரியோட கேப்டன்சி டாஸ்க்ல பாலா இருந்திருக்கனும். ஏன்னா ஆரி அளவுக்கு அங்க எல்லா கேஸ்லேயும் வாதாடினது பாலா தான். ஆனா சோம் வாய்ப்பை பறிச்சுட்டதா குற்ற உணர்ச்சி இருந்ததால அவர் பேர் நாமினேஷனுக்கு வரலை.

எப்பவும் பெஸ்ட் கொடுக்கற ஒருத்தர் தடம் மாறி இப்ப மோசமான பர்பாமன்ஸ் லிஸ்ட்ல வந்து நிக்கறாரு. இந்த ரியாலிட்டியை பாலாவால ஏத்துக்க முடியல. அதுவும் அவரோட போட்டியாளர்கள் என்று கருதக்கூடிய ஆரி, சோம், ரியோ மூணு பேரும் கேப்டன் பதவிக்கு போட்டி போடும் போது பாலா ஜெயிலுக்கு போக வேண்டிய கட்டாயம். நிஜம் புரியற போது வந்த எரிச்சல், கோபம் தான் நேத்து பாலா காட்டினது. தற்காலிகமான இந்த தோல்வியை பாலா எப்படி எடுத்துக்குவாருனு தான் தெரியல. தானே உணர்ந்து தவறை திருத்திக்கிட்டாருனா அடுத்த வாரமே டாப்ல வந்துடலாம். ஆனா அதுக்கான பொறுமை, அனுபவம் பாலாவுக்கு இருக்கானு தெரியல. இதை சரியா எடுத்து சொல்ல சாம் மட்டும் தான் பாலா கூட இருக்காங்க. இப்ப இருக்கற சூழ்நிலைல பாலா மத்தவங்க சொல்றதை கேப்பாரானு தெரியலை. பாலா ஜெயிலுக்கு போனது அவரை எந்த விதத்துல மாத்திருக்குனு அடுத்த வாரத்துல பார்க்கலாம்.

ஏற்கனவே எரிச்சல்ல இருந்த பாலா, சுச்சியோட பேச்சால இன்னும் அதிகமா கோவபடறாரு. பாலாவோட டிஸ்ட்ராக்‌ஷனுக்கு சுச்சியும் ஒரு முக்கியமான காரணமா நினைக்கிறேன். ஏன்னா ஷிவானி-பாலா உறவை பத்தி அவங்க தான் வெளிப்படையா பேச ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் தான் ஹவுஸ்மேட்ஸ் கலாய்க்கற அளவுக்கு இப்ப இருக்கு. நேத்து ரம்யாவும், சாம் சேர்ந்து ஷிவானியை கலாய்ச்சது நினைவிருக்கலாம். சுச்சி வெளிய பார்த்துட்டு வந்து சொன்ன விஷயங்கள் பாலாவுக்கு குழப்பத்தையே தந்துருக்கு. அதில்லாம பாலா கூடவே சுச்சி இருக்கறதும் ஒரு தடைக்கல்லா இருக்கு.

பாலா ஒரு சொல் பேச்சு கேக்காத, நிறைய திமிரோட இருக்கற பையன் தான். ஆனா அதே சமயம் தவறுகள் சுட்டிக்காட்டபடும் போது அதை ஏத்துக்கற மனப்பக்குவம் இருக்கு. கமல் சார் செஷன்ல தவறு சொன்ன உடனே அதுக்கு மன்னிப்பு கேக்கறவர் பாலா மட்டும் தான். மத்தவங்க எல்லாருமே தவறுக்கு ஜஸ்டிபிகேஷன் தான் கொடுப்பாங்க.

இந்த ஜெயில் தண்டனையை ஹவுஸ்மேட்ஸ் சதினு நினைக்காம பாசிட்டிவா திங்க் பண்ணி, நம்ம கிட்ட என்ன தவறுகள் இருக்குனு யோசிக்கனும். அதை பாலா செய்வாராங்கறது தான் இங்க மில்லியன் டாலர் கேள்வி. என்னையாடா ஜெயிலுக்கு அனுப்பினீங்கனு வெறியாகி, யார் சொல் பேச்சும் கேக்காம, இன்னும் அதிகமா தவறுகள் செய்யவும் வாய்ப்பிருக்கு. பாலா என்ன செய்யப் போறாருனு பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெயிலுக்கு போனதிலிருந்தே சுச்சி என்ன பேசினாலும் கத்திட்டே இருந்தாரு பாலா. பாலாவோட மனநிலையை புரிஞ்சு கொஞ்ச அமைதியா இருந்திருக்கலாம். ஆனா அதை புரிஞ்சுக்க கூடிய நிலைமைல சுச்சி இருக்காங்களானு டவுட்டா இருக்கு. ஒரு காலத்துல வியந்து பார்த்த ஆளுமை சுச்சி. ஆர் ஜெவா ஆரம்பிச்சு டிவில தன்னோட பேர்ல ஒரு ப்ரோகிராம் செய்யக்கூடிய அளவுக்கு திறமைசாலி. பாடகி, பாடலாசிரியர், இப்படி ஒரு பன்முக திறமைசாலியை இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு. அவங்க உடல் மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு இந்த வாரம் அவங்களை வெளிய வரணும்னு தான் அவங்க நலம்விரும்பிகளின் ஆசை.

ஷிவானியை உன் ஆளுனு சொல்லி பாலாவை டென்சனாக்குனாங்க. ஷிவானி வரும் போது அவங்க கடுப்பேத்த எதையோ பேசினாங்க. இந்த வீட்டுல அனிதாவும், பாலாவும் தான் எனக்கு ரொம்ப பிடிச்சவங்கனு சொன்னது சுச்சி தான். பாலாவோட ஒரு பிரச்சினை வரும் போது அனிதா மூலமா தான் பாலா கிட்ட பேசினாங்க. அந்தளவு புரிதல் இருந்த அனிதாவோட நேத்து பிரச்சினை. சுச்சி கொடுத்த ப்ரெண்ட் ஷிப் பேண்டை அனிதா கையில கட்டிக்கலை. அதனால அதை திருப்பி கொடுனு கேட்டுட்டாங்க. அனிதாவும் கோவமா கொடுத்துட்டு போய்ட்டாங்க. ரெண்டு பக்கமும் பேச முயற்சி செஞ்ச சனம் பார்க்கத்தான் பாவமா இருந்தது.

அடுத்து கேப்டன்சி டாஸ்க். ஒரு நீளமான ஸ்டிக்ல கண்டஸ்டண்ட் போட்டோ ஒட்டின ப்ளாக் ஒன்னை நிக்க வச்சு, அந்த ஸ்டிக்கை கைல பிடிச்சு நிக்கனும். கூடவே மணி ஒலிக்கும் போது எதிர்பக்கம் நடந்து போகனும். அர்ச்சனா முதல்ல அவுட் ஆனாங்க. உடல் பலம் சார்ந்த போட்டியா இருந்ததால பெண்களுக்கு ரொம்பவும் கடினமா இருந்தது. இதுவரைக்கும் கேப்டன் ஆகாத சோம் இதுல ஜெயிக்கனும்னு எதிர்பார்த்தாங்க. ஆனா அவரும் வெளிய வந்துட்டாரு. ரியோவும் ஆரியும் மட்டும் போட்டில இருந்தாங்க. ஆரி ரொம்ப அசால்ட்டா இருந்தாருனு தான் சொல்லனும். எதிர்ப்பக்கம் போகும் போகும் போது அவ்வளவு வேகமா போனாரு. ரியோ அதை ஆச்சரியமா பார்த்தாரு. ஆரி அவுட்டாகறதுக்கு கொஞ்சம் முன்னாடி ரியோ அவுட் ஆகிருக்கனும். ஜஸ்ட்ல தப்பிச்சாரு. இந்த வார கேப்டன் ரியோ.இன்னும் ஒரு தடவை கூட கேப்டன் ஆகாம நிறைய பேர் இருக்கும் போது ரியோ ரெண்டாவது தடவை கேப்டன் ஆனது நியாயமற்ற செயல் தான்.

சாம் கேப்டனான போது சோமோட வாய்ப்பு பறிக்கபட்டதா குற்றச்சாட்டு வச்ச ஆரி, இந்த முறை கடுமையா போட்டி போட்டது ஆச்சரியம். 6 பேர்ல கேப்பியும், சோம் ரெண்டு பேரும் இதுவரைக்கும் கேப்டன் ஆகல. ரெண்டு பேருமே இதுக்கு முன்னாடி கேப்டன்சி டாஸ்க்ல கலந்துகிட்டு நூலிழைல வெற்றியை தவற விட்டவங்க. ஆரி நினைச்சுருந்தா கேப்பி, சோம் ரெண்டு பேர் மட்டும் இறுதி களத்துல இருக்கறா மாதிரி நடந்திருக்கலாம். ஆனா அவர் அதை செய்யலை. அர்ச்சனா, ரியோ ரெண்டு பேரும் சோம்க்காக விட்டு கொடுத்திருப்பாங்க. சாம் கண்டிப்பா இதுக்கு ஒத்துகிட்டு இருந்துருப்பாங்க. இந்த திட்டத்தை ஆரி தான் முன்னெடுத்தருக்கனும். சோம் வாய்ப்பு பறிபோச்சுனு சம்யுக்தாவை வறுத்தெடுத்தவரு, இன்னிக்கு வாய்ப்பிருந்தும் சோமை கேப்டன் ஆக்கனும்னு தோணல. அப்படி செஞ்சுருந்தா, அந்த செயல் பாராட்டபட்டிருக்கும். ஆரியே தன்னை பற்றி கட்டமைத்த பிம்பமான நேர்மைக்கு மிகப்பெரிய பூஸ்ட்டா இருந்திருக்கும். கமல் சார் கிட்ட பாராட்டு கூட வாங்கிருக்கலாம். அவரோட கிராப் மேல போயிருக்கும். ஆனா ஆரி போட்டி போடறதை பார்த்த போது, எப்படியாவது இதுல ஜெயிக்கனும்னு ஆசைப்பட்டா மாதிரி தான் தெரிஞ்சுது.

அடித்து ஹூண்டாய் காரோட டாஸ்க். அதுல ஆரி, சாம் ஜோடி தான் ஜெயிச்சாங்க.

ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் சாப்பிட்டு முடிச்சதுக்கு அப்புறம் ஸ்டோர் ரூம்ல அவ்வளவு சாப்பாடு ஐட்டங்களை கொடுத்து விட்டுருக்காங்க. இப்படி பண்றிங்களே பிக்பாஸ். பாலாவும் சுச்சியும் ரிலீஸ் ஆனாங்க. அப்ப சனம ஆடின டான்ஸை பார்க்க கண் கோடி வேண்டுமப்பா கண் கோடி வேண்டும்.

You'r reading ஜெயிலுக்கு போகும் பாலா - சுசித்ரா ,பாலாவின் கோபம் , இந்த வார கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெறுவது யார்? - பிக் பாஸ் நாள் 48 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

அண்மைய செய்திகள்