சீனியர் ஹீரோ படத்தில் ஹீரோயின் 3வது முறையாக மாற்றம்.. வனமகன் நடிகைக்கும் கல்தா..

by Chandru, Nov 21, 2020, 11:25 AM IST

சீனியர் ஹீரோக்களுடன் நயன் தாரா, காஜல் அகர்வால். ரகுல் பிரீத், இலியானா போன்ற நடிகைகள் நடிக்க மறுத்து வந்தனர். இதனால் பாலிவுட்டிலிருந்து ராதிகா ஆப்தே, ஹூமா கொரோஷி போன்ற நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைத்தனர். காஜல் அகர்வால், நயன்தாரா போன்றவர்கள் தற்போது சீனியர் ஆகிவிட்டதால் அவர்கள் மூத்த நடிகர்கள்படங்களில் நடிக்க சமீபகாலமாகச் சம்மதிக்கின்றனர்.

தெலுங்கை பொறுத்தவரை நயன்தாரா படங்களை குறைத்துக் கொண்டிருக்கிறார். என்.டி. பாலகிருஷ்ணா நடித்த பயோபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டனர். ஆனால் வேறுபடங்களில் நடிப்பதால் கால்ஷீட் தரவில்லை. மேலும் சில சீனியர் காஜல் அகர்வால் போன்ற ஹீரோயின்களிடம் கால்ஷீட் கேட்டனர் அவர்களும் மறுத்துவிட்டனர். கடைசியாக பூர்ணாவிடம் கேட்டபோது நடிக்க ஒப்புக்கொண்டார்.

இப்படத்தில் இரண்டு வேடங் களில் பாலகிருஷ்ணா நடிக்கி றார். மற்றொரு பாத்திரத்துக்கு சற்று வயது குறைந்த இளம் நடிகையை தேடினார்கள். மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில் நடித்த பிராயாகா மார்ட்டினை கேட்டபோது அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். அவரையும் பாலகிருஷ்ணாவையும் வைத்து டெஸ்ட் ஷூட் நடத்தினார்கள். அதில் அண்ணன் தங்கைபோல் இருவருக்கும் வயது வித்தியாசம் இருப்பதுபோல் சிலர் சொல்லவே பிராயாகாவை இயக்குனர் மாற்றிவிட்டு வேறு நடிகையைத் தேடினார் அப்போது தான், வனமகன் கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்த சாயிஷா சைகல் ஒப்பந்தம் ஆனார்.

இதைப் பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சாயிஷாவும் தனது இணைய தள பக்கத்தில் உறுதி செய்தார். தற்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது சாயிஷாசை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக பிரக்யா ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரையும் மாற்றுவார்களோ என்று கேட்பதற்கு முன்பாக அவர் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு பாலகிருஷ்ணாவுடன் நடித்து வருகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை