அனிதாவை தூண்டி விடும் ஹவுஸ்மேட்ஸ்,அனிதா-ரியோ சண்டை , இந்த வார தலைவரான ரம்யா - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 68

by Mahadevan CM, Dec 12, 2020, 13:42 PM IST

ஜெயிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அனிதாவை தட்டி எழுப்பி சமாதானம் பேச வருகிறார் ரியோ. "நானும் பேசுவேன்" என்றவாறு தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டு தயாரானார் அனிதா. "எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டனு சினிமால ஒரு டயலாக் வரும். நேத்து ரியோவும் அதைதான் செஞ்சாப்ல. விளக்கம் கொடுக்கறேன்னு போய் எழுப்ப, அனிதா சாமியாடிருச்சு.அதே பிரச்சனை தான் அனிதாவோட கேள்வி ரொம்ப சிம்பிள்.

ஒரு டீமா சேர்ந்து வேண்டாம்னு முடிவு எடுத்த விஷயத்தை தனி ஆளா செஞ்சு டாஸ்க்கை சொதப்பின நிஷா பெஸ்ட் பர்பாமர். ஆனா ஒரு டீமா சேர்ந்து செய்யலாம்னு முடிவெடுத்த விஷயத்தை செஞ்ச நான் ஜெயில்ல இருக்கனுமா? இந்த கேள்விக்கு ரியோ கிட்ட பதில் இல்லை. நிஷா செஞ்சது பிடிக்கலை, அதுக்கு எவிக்‌ஷனுக்கு நாமினேட் செய்வேன். அனிதா செஞ்சது சுவாரஸ்யம் கம்மினு ஒரு மொக்கையான விளக்கத்தை கொடுத்துட்டு இருந்தார்.

இந்த வாரம் முழுவதும் எப்படி பர்பாமன்ஸ் பண்ணிருக்காங்கனு பார்த்து நாமினேட் செய்யனும். அது தான் டாஸ்க். ஆனா ரியோ சொல்ற ரீசன் பர்பாமன்ஸ்ல வரவே வராது. எவிக்‌ஷன் ப்ராஸஸ்க்கு இந்த காரணம் சொல்லலாம். ஆனா வொர்ஸ்ட் பர்பாமருக்கு இது காரணமே இல்லை.

ரியோ இங்க பேசிட்டு இருக்கும் போது உள்ள பெட்ரூம்ல இருந்து பார்த்து பொரணி பேசிட்டு இருந்தாங்க. வர வர இவங்க நடந்துக்கறது, பேசறது, அந்த டீமோட பாடி லாங்வேஜ்லாம் பார்த்தா பயங்கர எரிச்சல் வருது.

5 பேர் உன் பேர் சொல்லிருக்காங்க. நான் ஒருத்தன் சொன்னது தான் பிரச்சனையானு ஒரு கேள்வி கேட்டாரு ரியோ. பொதுவா யோசிக்கும் போது நியாயமான கேள்வியா தெரியும். முதல் விஷயம் அந்த நாமினேஷன் பாலா கிட்ட இருந்து தான் ஆரம்பிச்சது. அதாவது வலமிருந்து இடம். ஆனா இடது ஓரம் உக்காந்திருந்த ரியோ தடாலடியா வந்து முந்திட்டு நாமினேட் செய்யறாரு. இதுவே உறுத்தலா இருந்தது. இந்த டாஸ்க்ல பாலா டீம் எடுக்கும் போதே இவங்க ஒன்னா சேரக்கூடாதுன்னு தான் எடுத்தாரு. அதே மாதிரி இவங்க கையை வச்சே இவங்க கண்ணை குத்தனும்னு தான் ப்ளான். அதனால ஐடியா மட்டும் கொடுத்துட்டு விலகி இருந்துட்டாரோனு தோணுது. ஒரு கேப்டனா பாலா சொல்லும்போது கேட்டு தான் ஆக வேண்டிய கட்டாயம் இருக்கு.

பாலா டீம் மனிதர்களா இருக்கும் போதே ரியோ, தன் டீமை சேவ் பண்ண விளையாடறாருனு வெளிப்படையா சொல்லிட்டாரு. அப்ப கூட இருந்தது அனிதா, ஆரி, ஆஜித் 3 பேரும். ரியோ நிஷா மட்டும் அங்க இல்லை. இதெல்லாம் கூட விட்ரலாம். ஆனா டாஸ்க் முடிஞ்ச உடனே டீமா சேர்ந்து பேசினாங்களே, அதை மறக்க முடியுமா? "உன்னை காப்பாத்த ட்ரை பண்றோம்னு உனக்கு தெரியலியானு கேப்பியை பார்த்து கேட்டதே போதும். ரியோ பக்கம் நியாயம் இல்லைனு சொல்ல அதை விட ஒரு பெரிய ஆதாரம் தேவையே இல்லை.

இவ்வளவும் பண்ணிட்டு ஏன் அனிதாவை டார்கெட் செய்யனும்?. இது ஒரு செயின் ஆப் ஈவண்ட்ஸ். ஒரு டாஸ்க்ல அனிதாவை நாமினேட் செய்யனும். வேணும்னே ஒரு மொக்கை காரணம் சொல்லனும். அதன்மூலமா அனிதாவை தூண்டி விடனும். அனிதா கோபத்துல பேசி, சண்டை போடுவாங்க. அதையே காரணமா வச்சு எவிக்‌ஷன் ப்ராஸஸ்க்கு நாமினேட் செய்யலாம். இவங்க ஒரு டீமா செய்வாங்க. மத்த ஹவுஸ்மேட்ஸ்க்கு "இவங்க என்னடா எப்ப பார்த்தாலும் சண்டைக்கே நிக்கறாங்கனு" யோசிச்சு அவங்களும் அனிதா பேரை சொல்லுவாங்க. கடைசியா பார்க்கும் போது அனிதாவுக்கு 6-8 ஓட்டு விழுந்துருக்கும். இது தான் இங்க தொடர்ச்சியா நடந்துருக்கு. இந்த ப்ராஸஸ் அனிதாவுக்கு மட்டும் இல்லை, மத்த எல்லாருக்குமே பொருந்தும்.

6-8 ஓட்டு ஒருத்தருக்கே போகும் போது அந்த வீட்ல இருக்கற இன்னொருத்தர் நாமினேஷனுக்கு போகாம தப்பிச்சுருவாங்க. ஏன்னா 3 ஓட்டு வந்தாலே நாமினேஷன் தான். 8 ஓட்டு விழுந்தாலும் அதே நாமினேஷன் தான். இந்த ப்ராஸஸ் தான் இங்க தொடர்ந்து நடந்துட்டு இருக்கு. இந்தளவு திட்டம் போட்டு செய்ய முடியுமா? என்ற கேள்வி வரலாம். இதுவரைக்கும் நடந்த சண்டைகள், நாமினேஷன்களை எடுத்து பார்க்கும் போது, மேல சொன்ன விஷயம் நடந்திருக்க வாய்ப்பு இருக்குனு தான் தோணுது.

இந்த வீட்ல சனம், அனிதா, பாலா, ஆரி 4 பேருக்கும் 8 ஓட்டு வந்துருக்கு. ஆனா அர்ச்சனா டீம்ல இருந்தவங்க யாருக்கும் ஒரே டைம்ல இவ்வளவு ஓட்டு விழுந்ததே இல்லை. அதுவே குரூப்பிசத்துக்கான பெரிய ஆதாரம்.

அடுத்து ரியோ இன்னொரு விளக்கம் சொல்றாரு. கேப்பி பின்னாடி போனதுக்கான விளக்கம். மத்தவங்க எல்லாம் எடுத்தது போக கேப்பி, ஷிவானி தான் இருந்தாங்க, அதுலேர்ந்து நான் கேப்பியை செலக்ட் செஞ்சது தவறா?னு கேள்வி கேக்கறாரு. இந்த டாஸ்க் ஆரம்பிச்ச போது விதிமுறைகளை சரியா புரிஞ்சுக்காம ஒரே நேரத்துல எல்லா ரோபோக்களையும் டார்கெட் பண்ணி விளையாடினாங்க. அதை அர்ச்சனா கண்டிச்சது நினைவிருக்கலாம். பிக்பாஸ் கூப்பிட்டு ரியோ கிட்ட பேசினாரு. ஒரு டைம்ல ஏதாவது ரெண்டு ரோபோவை டார்கெட் செய்யனும், மீதி இருக்கறவங்களை வேலை வாங்கனும். இதுல ரியோ என்ன செஞ்சாருனு எல்லாருக்கும் தெரியும். அவர் யாரையும் ஹர்ட் செய்யாம சேஃப் கேம் விளையாடினது உண்மை.

அர்ச்சனா அழுததை பத்தி சொன்ன உடனே அதுக்கு விளக்கம் கொடுக்க வந்தாங்க அர்ச்சனா. டாஸ்க் பஸ்ஸர் அடிக்க 15 நிமிஷம் இருக்கும் போது தான் அவங்க உடைஞ்சு அழுததா சொல்றாங்க. உண்மை தான். ஆனா அவங்க அழுததுக்கு அப்புறம் அந்த டாஸ்க் எப்படி போச்சுனு பார்க்கனுமே. பாலா டீம் அதுக்கப்புறம் சர்வ ஜாக்கிரதையா தான் நடந்தாங்க. அதுக்கு காரணம் நிஷாவோட செயல் தான். அனிதா சொல்றதும் அதைத்தான். ஆனா ஒவ்வொரு தடவை அதை பத்தி சொல்லும் போதும், குறுக்க புகுந்து பேச வந்த விஷயத்தை திசை திருப்பி நிஷாவை காப்பாத்தறதை தொடர்ந்து செய்யறாங்க அர்ச்சனா. நாமினேஷன் போது பாலா பேச வந்த போதும் அதைத்தான் செஞ்சாங்க. நேத்து அனிதா கிட்டயும் அதையே தான் செஞ்சாங்க. பாலாவோ, அனிதாவோ அர்ச்சனாவை குறை சொல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனா அர்ச்சனா மேல எந்தத் தவறும் இல்லை. நிஷா பேசி அர்ச்சனா உடைஞ்சு அழுதப்போ நிஷாவை திட்டித் தீர்த்தவங்க தான் அதிகம். அர்ச்சனாவுக்கு அனுதாபம் தான் வந்தது. ஆனா அந்த அனுதாபத்தை வச்சு நிஷாவை காப்பாத்த முயற்சி செய்யறாங்க. அர்ச்சனா.

அனிதாவும், ரியோவும் ரணகளமா சண்டை போட்டுட்டு இருந்த போது ஒரு மஹான் அங்க தூங்கிட்டு இருந்தாரு. அவர் தான் ஜித்து பாய். அவர் வெளியே வந்த உடனே ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கனும். இப்பவே பாதி தாடி வந்துருச்சு. கல்யாணமான ஆண்களுக்கு அவர்கிட்ட ட்ரைனிங் எடுத்துக்கனும். "புயல் காற்றில் பொறி சாப்பிடுவது எப்படி", "தலை போகற அளவுக்கு பிரச்சினை வந்தாலும் கூலா மிக்சர் சாப்பிடுவது எப்படி", துடைப்பத்துடன் மனைவி வரும்போதும், தூங்குவது எப்படி", இப்படி பல "எப்படிகளை" தமிழ் சமுதாயம் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

அனிதா, ரமேஷ் இருவரையும் விடுதலை செய்தார் பிக்பாஸ்.

அடுத்து இந்த வாரத்துக்கான கேப்டன்சி டாஸ்க். கொடுக்கப்பட்ட க்யூபை அடுக்கி தங்கள் புகைப்படம் வருமாறு செய்ய வேண்டும். "என்னது மறுபடியும் க்யூபா" னு பாலா டைமிங்ல கமெண்ட் அடிச்சாரு.

பாலாவும், ரம்யாவும் சரிசமமாக போட்டி போட, நிஷா என்ன செய்யறாங்கனு அவங்களுக்கே தெரியல.

ஆஜித், ஷிவானி தவிர மீதி அனைவரும் நிஷாவுக்கு சப்போர்ட். நிஷா தப்பு தப்பா அடுக்கினதை பார்த்து டென்ஷன் ஆகிட்டாங்க. அதை பார்த்து ஆரி கொடுத்த ரியாக்சனை நோட் பண்ணி வைங்க, பின்னாடி பேசுவோம். உண்மையிலேயே நிஷாவுக்கு கேம் புரியலையா இல்ல அவங்க கெப்பாசிட்டியே அவ்வளவு தானானு சந்தேகமே வந்துருச்சு. இந்த பக்கம் பாலா முதல்ல முடிச்சாரு, பஸ்ஸரும் அடிச்சது. கேப்டன் ஆனதுக்கு வாழ்த்துகளும் சொல்லிட்டாரு பிக்பாஸ். அப்புறம் தான் ஒரு பெரிய டிவிஸ்ட் நடந்தது.

டீம் தேர்ந்தெடுக்கச் சொன்னதால எல்லாரும் லிவிங் ஏரியாவுக்கு வந்துட்டாங்க. எல்லாருக்கும் நன்றி சொன்ன பாலா, க்யூப் அடுக்கினதுல தான் தவறு செஞ்சுட்டதாகவும், ரம்யா தான் தலைவருக்கு தகுதியானவர்னு சொன்னதும் எல்லாருக்கும் அதிர்ச்சி. ரியோவும், சோம் ரெண்டும் பேரும் வெளியே போய் செக் பண்ணும் போது தான் ரெண்டு க்யூப் இடம் மாறி இருக்கறது தெரிஞ்சுது. கேப்டன் அனிதாவை செக் பண்ணச் சொன்னாரு பிக்பாஸ். அவங்களும் செக் பண்ணி சொன்னதும், ரம்யாவை தலைவரா அறிவிக்கறாரு பிக்பாஸ்.

முதல்ல இதை பார்க்கும் போது பிக்பாஸ் டீமுக்கு தெரிஞ்சு தான் பண்ணிருக்கனும்னு நினைச்சேன். ஒருவேளை பாலாவுக்கு செக் வைக்கறதுக்கு இதை செஞ்சுருப்பாங்கனு கூட யோசிச்சேன். ஆனா பிக்பாஸ் விளக்கம் கொடுத்ததுக்கு அப்புறம் தான், இது அவங்க டீம் சைட் தவறுனு தெரிஞ்சுது. 3வது அம்பயர் கண்ணாடி போட மறந்துட்டாருனு பிக்பாஸ் கலாச்சாரு. அது புரியாத பாலா கிட்ட ரியோ வேற ஏதோ சொல்ல, அவங்களை நம்பாதீங்க கோர்த்து விடறாங்கனு பிக்பாஸ் சொன்னது ஜாலி மொமண்ட். இந்த சீசனோட பெஸ்ட் மொமண்ட்ஸ்ல இதுவும் ஒன்னு.

இந்த சீசன் யாருக்கு எப்படி வேணும்னாலும் இருக்கலாம். பாலாவை பொறுத்தவரைக்கும் லைப்டைம் எக்ஸ்பீரீயன்ஸ். ரொம்ப பாசிட்டிவா வெளிய வருவாரு. அவர் நிறைய தவறு செய்திருந்தாலும், அதை அவரே உணர்ந்து திருந்த முயற்சிக்கிறார். கமல் சார் ஒவ்வொரு முறை அவர் தவறை சுட்டிக்காட்டும் போதும், தன்னை மாற்றிக் கொள்ள பெரும் முயற்சி எடுக்கிறார். தான் சொல்வதை கேட்கும் ஒரு மாணவனாக பாலாவை அவருக்கு பிடித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

பணம், பதவி, பெண், நிலம், அதிகாரம் இதெல்லாம் மாதிரி "நேர்மையும்" ஒரு போதை தான். ஒரு தடவை நீங்க நேர்மையா இருந்து, அதன் மூலமா கிடைக்கும் புகழுக்கு அடிமையாகிட்டா திரும்ப திரும்ப அது வேணும்னு கேக்கும். இந்த போதை ரொம்ப நல்லது. அப்படி ஒரு பிராண்டிங் பாலாவுக்கு கிடைச்சுருக்கு. இந்த போதை எப்பவும் பாலாவுக்கு இருக்கனும்னு வாழ்த்துவோம்.

கேப்டன் ரம்யா டீம் பிரிக்கும் போது அர்ச்சனாவை குக்கிங் டீம்ல போட்டாங்க. அவங்க கூட ஹெல்ப்புக்கு யாருனு கேக்கும் போது ஆரி கை தூக்கினாரு. அவர் ஏற்கனவே ரெண்டு வாரம் இருந்துட்டதா சொல்லி மறுத்துட்டாங்க அர்ச்சனா. ஆனா 3 வாரம் இருந்த கேப்பியை சேர்த்துகிட்டாங்க. ரமேஷும் அங்க போய்ட்டாரு. எப்படியும் எந்த வேலையும் செய்ய வேண்டியிருக்காது. கேப்பி தான் கேப்டன்.

டீம் பிரிச்சு முடிச்சதுக்கு அப்புறம் பாலா, அனிதாகிட்ட குக்கிங் டீம் பத்தி புலம்பிட்டு இருந்தாரு ஆரி. இந்த வாரம் கேப்பியை முன்னாடி நிறுத்தி விளையாடி, அவங்களை பெஸ்ட் பர்பாமருக்கு கொண்டு வர முயற்சி செய்யறாங்கனு சொன்னாரு. இதை நீங்க உள்ளேயே சொல்லிருக்கலாமேனு அனிதா சொன்னது வேலிட் பாயிண்ட். ஆரி பிரதர் வர வர எதுக்குமே பேசறதில்லை. நிஷாவுக்கு தான் வொர்ஸ்ட் பர்பாமர் கொடுத்திருக்கனும் சொன்னதும் ஆரி தான். ஆனா கேப்டன்சி டாஸ்க்ல நிஷா தப்பா விளையாடும் போது அவருக்கு இருந்த ஏமாற்றத்தை பார்க்கனுமே. நாமினேஷன் ப்ராஸஸ், டீம் டிஸ்கஷன் இப்படி எதுலேயும் அர்ச்சனா டீமுக்கு எதிரா ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கறாரு ஆரி. ஆனா அனிதா, பாலா கிட்ட பேசும் போது அர்ச்சனா டீமுக்கு எதிரா பேசறாரு. நிஷாவை பெஸ்ட் பர்பாமருக்கு நாமினேட் செய்ததும் ஆரி தான். ஏன் இவ்வளவு முரண்பாடான ஸ்டாண்ட் எடுக்கறாருனு கேட்டா ஆரி ஆர்மி அடிக்க வருவாங்க. நமக்கு எதுக்கு வம்பு.

ஹாட்ஸ்டார் வழங்கும் ட்ரிபிள்ஸ் வெப் சீரீஸ் வழங்கிய டாஸ்க் நடந்தது. ஹவுஸ்மேட்ஸ் 3 பேர் டீமா பிரிஞ்சு கதை சொல்லனும். மத்தவங்க கதை சொல்லும் போது கமெண்ட்ரி பண்ணி கலாய்ச்ச ரம்யாவை போட்டுக் கொடுத்தாரு பிக்பாஸ். நைட் டின்னர் பிக்பாஸ் அனுப்பி வைக்கறாரு. எதுக்குனு தெரியலை.

இந்த வாரம் கமல் சாருக்கு நிறைய வேலை இருக்கு. பொறுப்போடு விளையாடனும்னு அறிவுரை சொன்னதை கேட்டு நடந்த பாலா ஒரு பக்கம். இது குழு விளையாட்டு இல்ல, தனித்தன்மையோடு விளையாடுங்கனு சொன்ன அறிவுரையை கண்டுகொள்ளாத அர்ச்சனா குரூப் ஒரு பக்கம். கமல் சார் என்ன செய்யப் போறாருனு பொறுத்திருந்து பார்ப்போம்.

You'r reading அனிதாவை தூண்டி விடும் ஹவுஸ்மேட்ஸ்,அனிதா-ரியோ சண்டை , இந்த வார தலைவரான ரம்யா - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 68 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை