என் தந்தைக்கு போதை மருந்து பழக்கம் இருந்தது.. பிரபல நடிகர் மகள் ஓபன் டாக்..

by Chandru, Dec 12, 2020, 13:04 PM IST

பாலிவுட்டில் பிரபல நடிகர் சஞ்சய் தத். ஏராளமான இந்தி படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்ரம் எனப் பல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த முன்னா பாய் எம் பி பி எஸ் படம்தான் தமிழில் கமல்ஹாசன் நடிக்க வசூல் ராஜா எம்பிபிஎஸ் என்ற பெயரில் திரைக்கு வந்தது. சஞ்சய்தத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் நெகடிவ் எனத் தெரிந்தது.

ஆனால் அவருக்கு நுரையீரலில் புற்று நோய் இருந்தது கண்டறியப்பட்டது. அதற்காக அவர் நடிப்பிலிருந்து சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்து புற்று நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதில் குணம் அடைந்த நிலையில் கே ஜி எப் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.சஞ்சய் தத் வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். வெற்றி தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். போதை மருந்துக்கும் அடிமையாக இருந்திருக்கிறார். இந்த விவரங்களை அவரே தனது
வாழ்க்கை சரித்திர புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சஞ்சய் தத்துக்கு போதை மருந்து பழக்கம் இருந்தது பற்றி அவரது மகள் த்ரிஷலா தெரிவித்திருக்கிறார். இவர் ஒரு பிஸியோதெரபிஸ்ட் டாக்டர். அமெரிக்காவில் படித்தவர். சஞ்சய்தத் போதை மருத்துக்கு அடிமையானது பற்றி அவர் கூறும்போது,என் தந்தையின் கடந்த கால போதை மருந்து பழக்கம் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் அந்த பழக்கத்திலிருந்து மீண்டு விட்டார். அதுவொரு நோய் என்று தான் சொல்ல வேண்டும் ஒவ்வொரு நாளும் அந்த எண்ணத்திலிருந்து விடுபடப் போராட வேண்டும். அவர் போதை மருந்துகளை இப்போது பயன்படுத்தாவிட்டாலும் தனக்கு பிரச்சனைகள் இருக்கிறது என்பதை என்னிடம் சொல்வார். அதிலிருந்து விடுபட என்னிடம் உதவி கேட்பார். அதற்கான முயற்சியிலும் முனைப்பாக இருக்கிறார். இப்படி சொல்வதால் இதுவொன்றும் அவமானகரமான செயல் அல்ல. அதற்காக என் தந்தையை நினைத்துப் பெருமைப்படுகிறேன் என்றார்.

சஞ்சய் தத் ஏற்கனவே துப்பாக்கி வைத்திருந்ததாக சில வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதற்காகச் சிறைத் தண்டனையும் அனுபவித்து வருகிறார்.
பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இறந்ததற்கு அவருக்கு அதிக அளவில் போதை மருந்து தரப்பட்டு தற்கொலைக்குத் தூண்டப்பட்டது தான் காரணம் என்றும் சுஷாந்த் தந்தை சுஷாந்த் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது போலீஸில் புகார் அளித்தார். அதற்காக ரியா கைதாகி 1 மாதம் சிறையில் இருந்து பின்னர் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். நடிகை கங்கனா ரனாவத்தும் பாலிவுட்டில் போதை மருந்து பயன்பாடு இருக்கிறது என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதை மருந்து தொடர்பாக ரியா கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படியில் நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் போன்றார்களிடம், போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை