ஆரி ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்த தருணம்.. செம கியூட்டான ஃபேமிலி.. வெளியான 3வது ப்ரோமோ

by Logeswari, Dec 31, 2020, 17:45 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக 88 வது நாளில் அடி வைத்துள்ளது. பிக் பாஸின் மற்ற சீசனை ஒப்பிடும் பொழுது இந்த சீசன் கொஞ்சம் சுமார் தான். சின்ன சின்ன விஷயம் கூட இந்த சீசனில் புயலாக வெடிக்கிறது. அதுகூட பரவால டாஸ்க்குனு பேருல எல்லாரையும் ஒன்றாக விளையாடவிட்டு அதல ஒரு சண்டையை கிளப்புறாங்க. தகுதியானவர்கள் வீட்டை விட்டு செல்வதும் கொஞ்சம் கூட தகுதில்லாதவர்கள் வீட்டில் இருப்பது வழக்கமாக மாறிவிட்டது.

தற்பொழுது இறுதி கட்டத்தை நெருங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நாட்களாக பிரீஸ் டாஸ்க் டாஸ்க் நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகை தொடங்கிவிட்டது. இதை முதலில் தொடங்கி வைத்தது ஷிவானியின் அம்மா. அவங்க உள்ளே வந்து ஷிவானியை நல்லா வெச்சி செஞ்சாங்க. நேற்று சோமுவின் தம்பி, ரம்யாவின் அம்மா, தம்பி மற்றும் ரியோவின் மனைவி என பிக் பாஸ் வீடே கலகலப்பாக இருந்தது.

ஆரியின் ரசிகர்கள் எப்பொழுது தலைவரின் குடும்பம் வரும் என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்து கொண்டிருந்தனர். இன்று ஆரியின் குழந்தை மற்றும் மனைவி வருகின்றனர். அப்பொழுது ஆரியின் மனைவி நீங்கள் வீட்டில் எப்படி இருந்திங்களோ அப்படி தான் இங்கேயும் இருக்கீங்க. உங்களின் நடவடிக்கையில் எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறி இன்றைய ப்ரோமோவை முடிக்கின்றனர்.

You'r reading ஆரி ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்த தருணம்.. செம கியூட்டான ஃபேமிலி.. வெளியான 3வது ப்ரோமோ Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை