வாகனங்களில் பாஸ்டேக்: பிப்ரவரி 15 வரை அவகாசம்

வாகனங்களில் பாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

by Balaji, Dec 31, 2020, 17:41 PM IST

நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவகாசம் நீட்டிப்பு.தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த வாகனங்கள் நின்று செல்ல கால தாமதமாகும் என்பதால் தானியங்கி முறையில் கட்டணங்களை வசூலிக்கும் பாஸ்டாக் ( fastag) எனப்படும் டிஜிட்டல் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பெரும்பாலான வாகனங்களில் பாஸ்டாக் வருத்தப்படாமல் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தி வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர் இதைத் தவிர்க்கப் புத்தாண்டு முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இதற்கான அவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசு பாஸ்டாக் பெறுவதற்கான காலக்கெடுவை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஒரே ஒரு வரிசையில் மட்டும் பணம் செலுத்தி வாகனங்கள் பயணிக்கப் பிப்ரவரி 15 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You'r reading வாகனங்களில் பாஸ்டேக்: பிப்ரவரி 15 வரை அவகாசம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை