மத்திய அரசின் மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வரும் தோட்டங்களை, அரசு அலுவல்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சுற்றுலா செல்லும் போது பயன்படுத்திக் கொள்ள, வழிமுறைகளை இணையதளம் மூலம் செய்து கொள்ள எளிமைப்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் தொலைப்பேசி செயலியை "இ-சம்பதா" என்ற பெயரில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
அரசின் பொது பங்களா மற்றும் தோட்டங்களைப் பாதுகாக்க இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை நிர்வாக அமைப்பு டெல்லியில் உள்ளது. மேலும் நிர்வாக எளிமைக்காக, சண்டிகர், சென்னை, ஃபரிதாபாத், காஹிதாபாத், கொல்கத்தா, மும்பை, நாக்பூர் மற்றும் சிம்லா உட்பட 8 பிராந்திய அமைப்புகள் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள 31 இடங்களில் உள்ள பங்களா மற்றும் தோட்டங்களைப் பராமரித்து வருகிறது.
இந்த அமைப்புகள் அரசின் பங்களா மற்றும் தோட்டங்களைப் பாதுகாப்பதோடு, அரசு சார்ந்த அலுவல் மற்றும் அரசு ஊழியர்களின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பயன்பாடுகளை இணையம் மூலம் பதிவு செய்தல், முன்னுரிமையைப் பார்வையிடல் போன்ற எளிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இதற்கென பிரத்யேக இணையதளம் மற்றும் மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது மத்திய அரசு.
இனி https://esampada.mohua.gov.in/signin/who_we_are# இணையதளம் மூலமாகவோ அல்லது "E-sampada" எனும் மொபைல் செயிலி மூலமாகவோ முன்பதிவில் போன்ற வசதிகளை அரசு ஊழியர்கள் செய்து கொள்ளலாம்.