Saturday, Jul 31, 2021

ஆரி-பாலா ஆர்கியுமெண்ட் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 89

by Mahadevan CM Jan 2, 2021, 19:08 PM IST

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் வெற்றிகரமா முடிஞ்சதா பிக்பாஸ் அறிவிக்கிறார். கூடவே இந்த வாரத்துக்கான வொர்ஸ்ட் பர்பாமரை தேர்ந்தெடுக்கச் சொல்லிட்டாரு. இந்த வாரம் வேண்டாமே பிக்பாஸ்னு சொல்லிட்டு இருக்கும் போதே கேப்டன் ஆரி முதல் ஆளா நாமினேட் செய்ய வந்தாரு. அவர் எழுந்து போகும் போதே "இப்ப என்னைத் தான் குத்தப் போறார், பாரு" னு ஆஜித் கிட்ட சொல்றாரு பாலா. அதே மாதிரி முதல்ல பாலா பேரை சொல்லி ஆரம்பிச்சாரு ஆரி. என்ன தான் சண்டை போட்டாலும் பாலாவும், ஆரிக்கும் நடுவுல ஒரு சூப்பர் கெமிஸ்ட்ரி இருக்குல்ல.

இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க்ல அதிக முறை விதிமீறல் செஞ்சது பாலா தான். அந்த காரணத்தை தான் பாலா பேரை சொன்னவங்க எல்லாரும் சொன்னாங்க. ஆரியும் அதைத்தான் சொன்னார். கூடவே ஹவுஸ் க்ளீனிங் வொர்க் சரியா செய்யலைனு சொல்லும் போது, போன வாரம் பாலா கேப்டன்சிலனு ஆரம்பிக்கும் போது பாலா குறுக்க பேச ஆரம்பிக்கறான். இந்த வார பர்பாமன்ஸ் பத்தி பேசுங்கனு பாலா சொன்னது சரியான பாயிண்ட் தான். இந்த வாரம் ஹவுஸ் க்ளீனிங் சரியா செய்யலை, போன வாரம் கேப்டனா இருந்த போதே ரெண்டு தடவை தான் செஞ்சான், ஹேண்ட் ஓவர் செய்யும் போது ஒரு நாள் கழிச்சு தான் கொடுத்தான்னு சொல்லி பாலாவோட க்ரைம் ரேட்டை ஏத்தி விடப் பார்த்தாரு.

இந்த வாரம் ஹேண்ட் ஓவர் செய்யும் போது சர்வ ஜாக்கிரதையா ஆரி கிட்ட பேசி, அடுத்த நாள் க்ளீன் செஞ்சு தரதுக்கு ஆரி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் செஞ்சாரு பாலா. ஆனா அதை நாமினேஷனுக்கு ஒரு காரணமா சொன்னது, ஆரியோட பிழை. கூடவே போன வாரம் பாலா சரியா செய்யலைனா போன வாரமே அவரை வொர்ஸ்ட் பர்பாமன்ஸ்க்கு நாமினேட் பண்ணிருக்கலாம். ஆனா கேப்டன்சி நல்லா வேலை செஞ்சாருனு சொல்லி பெஸ்ட் பர்பாமன்ஸ்க்கு நாமினேட் செஞ்சதும் இவர் தான். ஆனா போன வாரம் சரியா செய்யலைனு இப்ப வந்து சொல்றாரு ஆரி.

பாலா இதை தட்டிக் கேக்க, வழக்கம் போல "இது என் கருத்து" "நான் என்ன பேசனும்னு நீ சொல்லாத" "நாமினேஷன் போது குறுக்க பேசாத" னு ஆரி பதில் சொல்லிட்டே இருந்தார். பாலாவும் விடாம பேசிட்டு இருந்தான். "நீ வந்து சொல்லுடானு" ஆரி பேசினது பாலாவை தூண்டி விட்ருச்சு. உடனடியா எழுந்து ஆரி கிட்ட போய் வார்ன் பண்றா மாதிரி பேச ஆரம்பிச்சுடான். ஹவுஸ்மேட்ஸும் என்ன பண்றதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தாங்க. சண்டை போட ஆரம்பிச்ச காரணத்தை மறந்து வார்த்தைக்கு வார்த்தை பேசி சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க.

ஒரு வழியா சமாதானம் ஆகி பாலாவை நாமினேட் செஞ்சுட்டு வந்தாரு ஆரி. அடுத்து எந்திரிச்சு போன பாலா பழி வாங்குற விதமா ஆரி பேரை சொல்லி நாமினேட் செய்ய ஆரம்பிச்சான். அதுக்கு அவன்சொன்ன காரணம் தான் சென்சேஷன். ஆரி தன் படுக்கையை எடுத்து வைக்கறதில்லை, துவைச்ச துணியை எடுத்து வைக்கறதில்லை, கெட்டுப் போன பழத்தை டைனிங் டிள்ள வைக்கறாருனு இப்படி காரணங்கள் சொல்லிட்டே இருந்தான்.. ஆரியே சிரிச்சுட்டு தான் இருந்தாரு.

வொர்ஸ்ட் பர்பாமருக்கு ஆரியும், பாலாவும் செலக்ட் ஆனாங்க. பெஸ்ட் பர்பாமருக்கு சோம், ரியோ, ஆஜித் செலக்ட் ஆனாங்க. ரம்யா தான் ஆரியையும், பாலாவையும் ஜெயில்ல போட்டாங்க. காலைக்காட்சி முடிஞ்சுது, மேட்னி ஷோ இருக்கானு ரம்யா எந்த நேரத்துல கேட்டாங்களோ, அப்படியே நடந்தது. உள்ள போன ஆரி, ரியோவை கூப்பிடச் சொன்னாரு.

ரியோ நாமினேட் செஞ்சதும் பாலா, ஆரியை தான். ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே இருக்கறதால மத்த எல்லா விஷயத்திலும் சுவாரஸ்யம் கம்மியாகுதுனு வித்தியாசமா ஒரு உருட்டு உருட்டினாரு. அதை பத்தி விளக்கம் கேக்கனும்னு ரியோவை வரச்சொன்னாரு ஆரி. ரியோவும் வந்து விளக்கம் கொடுத்தாரு. சேஃப் கேம் ஆடறதா ரியோ மேல குத்தம் சொன்ன உடனே ரியோவுக்கும் கோவம் வந்துடுச்சு.

ரியோவுக்கு விளக்கம் கொடுத்துட்டு இருக்கும் போது பாலாவோட பேரைச் சொல்ல, பாலாவுக்கு ஆரிக்கும் திரும்பவும் ஒரு விவாதம் வந்தது. அந்த டைம்ல ஆரியோட பாயிண்ட்ஸ் எதுவுமே சரியானது கிடையாது. "கிச்சன் டீமுக்கு ஏன் வரலை, அப்ப உனக்கு இன்வால்வ்மெண்ட் இல்லை."னு சொன்னது சுத்த பேத்தல். யாருக்கு என்ன இண்ட்ரஸ்ட் இருக்கோ அதை செய்யறாங்க. ஒருவேளை பாலாவை கிச்சன் டீம்ல போடனும்னா இந்த வார ஆரம்பத்துலேயே ஆரி இதை சொல்லிருக்கலாம். அப்ப எதுவும் சொல்லாம இந்த வாரம் முடிஞ்சதுக்கு அப்புறம் இப்படி ஒரு பாயிண்ட்டை எடுத்து வைக்கறது நியாயமே இல்லை.இதை பத்தின விவாதம் செய்யும் போது, இது என்னோட பார்வை. நான் என் கருத்தை சொல்றேன்னு ஆரி சொன்ன போது, இந்த லாஜிக் எனக்கும் பொருந்தும் இல்லைனு ரியோ கேட்டதும் சரியான பாயிண்ட்..

ப்ரீஸ் டாஸ்க்ல சோம், ரியோ, கேப்பி எல்லாருமே காமெடி பண்ணிட்டு இருந்த போது, ஆரி அப்படி எதுவுமே செய்யலை, அல்லது மத்தவங்களை விட குறைவா செஞ்சுருக்காரு. அதை ரியோ சுட்டிக் காட்டறாரு. அதுக்கு நேரடியா பதில் சொல்லாத ஆரி, உடனே ரூல்ஸை மீறினவங்களை ஏன் சொல்லலைனு கேக்க ஆரம்பிச்சுட்டாரு. எல்லாருமே ரூல்ஸ் மீறிருக்காங்க. ஆரி கிட்ட இருக்கற ஒரு முக்கியமான பிரச்சினை அவர்கிட்ட ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதில் இன்னொரு கேள்வி தான் வரும். நாம கேட்ட கேள்விக்கு பதில் வராது. அப்படியே கேள்வி கேட்டே விவாதத்தை வளர்த்துட்டு போய் எதிராளியை குழப்பி விட்ருவாரு.

பாலா ஹவுஸ் க்ளீனிங் டீம்ல இருந்தது உண்மை. அவன் க்ளீன் பண்ணிட்டதா சொன்ன இடத்துல குப்பை இருக்கு என்பது ஆரியோட ஆர்கியுமெண்ட். பாலா வேலை செஞ்சுருக்கான், ஆனா ஆரி எதிர்பார்க்கற அளவுக்கு வேலை செய்யலை. அதான் விஷயம். அப்படியிருக்கும் போது "குனிஞ்சு நிமிந்து வேலை செய்ய சோம்பேறித்தனப்படற நீ என்கூட பேசறியா" னு ஒரு வார்த்தை விடவும் பாலா ரொம்பவும் சூடாகிட்டான். தொடர்ந்து ரெண்டு தடவை அதை சொன்னதும் பாலாவு கோபத்தோட உச்சிக்கே போய்ட்டான். மைட்டியிருந்த மைக்கை எடுத்து பெட்ல அடிச்சு, ரொம்பவும் ஹைப்பர் ஆகி கத்த ஆரம்பிச்சதும் அங்கிருந்த ஆஜித் டென்சன் ஆகிட்டான். பாலா இந்தளவு கோபப்பட்டிருக்க வேணாம். அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக்கறேன், மன்னிப்பும் கேக்கறேன்னு ஆரி சொன்னதுக்கு அப்புறம் தான் இந்த பிரச்சினை அப்போதைக்கு முடிஞ்சுது.

அடுத்து கேப்டன்சி டாஸ்க். அதுல ரியோ ஜெயிச்சு அடுத்த வார கேப்டன் ஆனார். கேப்டன் ரியோவுக்கு முதல் வேலை ஆரியையும், பாலாவையும் ரிலீஸ் பண்றது.

ஆரி வெளிய வந்ததுக்கு அப்புறமும் பாலா அவர் கிட்ட ஆர்கியுமெண்ட் பண்ணிட்டே இருந்தான். அதுவும் தேவையே இல்லாதது. அதுக்கான ஒரு காரணமும் ஆரியோட பேச்சுல இருந்து தான் வந்தது. "வேலை செய்யாதவங்களை விட்டுட்டு, வேலை செஞ்சவனை நாமினேட் செய்யறிங்க" னு ரியோ கிட்ட சொல்லிட்டு இருக்கும் போது, "அதையே தானே எனக்கு செஞ்சிங்கனு பாலா குறுக்க வந்தது பிரச்சினை ஆகிருச்சு.

அதுக்கப்புறம் ரியோ கூட உக்காந்து பேசறாரு ஆரி. அப்பவும் அவர் ஒரே கேள்வியை தான் திரும்ப கேட்டாரு. நீங்க நாமினேட் செய்யும் போது 7 பேர்ல என்னை விட சுவாரஸ்யம் குறைவா இருந்தவங்க யாருமே உங்க கண்ணுக்கு தெரியலியா". இந்த கேள்வியை யார் வேணா கேக்கலாமே. அத்தனை பேரும் தன்னை டிபெண்ட் பண்ணிக்க இந்த கேள்வியை கேக்கலாம். ஆனா ஆரியை தவிர வேற யாரும் இந்த கேள்வியை கேக்கறதில்லை.

அதுக்கப்புறம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்தது. இந்த வாரம் கமல் சார் பேச விஷயம் கிடைச்சுருக்ச்சு. என்ன சொல்லப் போறாருனு பார்க்கலாம்.

You'r reading ஆரி-பாலா ஆர்கியுமெண்ட் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 89 Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News

அண்மைய செய்திகள்