அனைவருக்கும் இலவச 4ஜி ஜியோ செல்போன் வழங்குவதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 40வது போர்டு மீட்டிங்கில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடந்த செய்தியளர்கள் சந்திப்பில் முகேஷ் அம்பானி கூறியதாவது, ''ஆகஸ்ட் 24ம் தேதி முதல் முன்பதிவு தொடங்குகிறது. இந்த போனை வாங்க விரும்புபவர்கள் ரூ.1.500 டெபாஸிட் செலுத்த வேண்டும். 36 மாதங்களுக்கு பிறகு, போனை திருப்பி அளித்தால், டெபாஸிட் தொகை திருப்பி அளிக்கப்பட்டு விடும். சுமார் 50 கோடி ஜியோ செல்போன் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது '' என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் முகேஷ் அம்பானியின் வாரிசுகள் ஆகாஷ், இஷா ஆகியோர் ஜியோ செல்போனில் உள்ள வசதிகள் குறித்து விளக்கிக் கூறினர். முதல்கட்டமாக 5 லட்சம் போன்கள் சந்தைக்கு வரவுள்ளன. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜியோ சிம் அறிமுகப்பட்டுத்தப்பட்டது. தற்போது, இந்தியாவில் 12 கோடி பேர் ஜியோ சிம் பயன்படுத்தி வருகின்றனர்.