அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்வு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது, 9 காசுகள் உயர்ந்து 68.65 காசுகளாக உள்ளது.

நேற்றைய வர்த்தக நேர முடிவின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 68.74 காசுகளாக இருந்த நிலையில், புதன்கிழமையான இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய ரூபாய் மதிப்பு சற்று உயரத் தொடங்கி, 9 காசுகள் வரை உயர்வை அடைந்தது.

புதிய அந்நிய முதலீடுகள் மற்றும் நேர்மறையான வர்த்தக தொடக்கத்தால், இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்வடைந்துள்ளதாக ஃபாரக்ஸ் வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மும்பை வர்த்தக சந்தையின் சென்செக்ஸ் புள்ளி 39,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும், தேசிய வர்த்தக சந்தை 11,700 என்ற குறியீட்டுடன் இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் உள்ளது.

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 69.71 அமெரிக்க டாலராக விற்பனை செய்யப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
3000-kg-gold-sale-is-targeted-for-Akshaya-thrithi
அடுத்த மாசம் சம்பள பணத்துக்கு வேட்டு வைக்க வருகிறது அட்சய திருதியை; 3000 கிலோ தங்கம் விற்பனைக்கு டார்கெட்!
Google-Issues-Clarification-After-Delhi-HC-asks-RBI-How-Google-Pay-is-Operating-Without-Authorisation
’கூகுள் பே’ நடத்த லைசென்ஸ் தேவையே இல்லை: டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு கூகுள் இந்தியா விளக்கம்!
Is-Google-Pay-operating-without-licence--Delhi-HC-asks-RBI
’கூகுள் பே’க்கு லைசென்ஸ் இருக்கா? ரிசர்வ் வங்கியிடம் அதிரடியாக கேள்வி கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம்!
India-highest-recipient-of-remittances-at--79-billion-in-2018
பாசக்கார இந்தியர்கள்.. தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்!
Rupee-rises-9-paise-to-68.65-against-US-dollar
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்வு!
gst-reached-new-goal
மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.06 லட்சம் கோடியை தாண்டியது -புதிய சாதனை
7years boy ryan tops forbes list
யூடியூப் மூலம் ஒரே ஆண்டில் 154 கோடி ரூபாய் சம்பாதித்த 7வயது சிறுவன்!
4-indian-origin-women-tops-forbes-tech-list
போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த 4 இந்திய பெண்கள்!
BJP-Govt-destroying-economy-says-Ramadoss
பொருளாதாரம் குற்றுயிரும் குலையுயிருமாக மாற்றப்பட்ட நாள் இன்று: ராமதாஸ்!
Only-Twenty-thousand-rupees-can-take-from-SBI-ATMs
எஸ்பிஐ வாடிக்கையாளர்களே கவனியுங்க.. நாளை முதல் புதிய உச்சவரம்பு அமல்
Tag Clouds