ஐபிஎல் சூதாட்டத்தில் மும்முரம் - இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அதிரடி கைது

IPL betting, ex-indian womens cricket coach Tushar arothe arrested in Vadodara

by Nagaraj, Apr 3, 2019, 09:10 AM IST

ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி யின் முன்னாள் பயிற்சியாளர் துஷார் அரோத்தை வதோதரா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காபி கபே ஒன்றில் போலீசார் நடத்திய ரெய்டில், ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டிருந்த மேலும் 18 பேரை போலீசார் அள்ளிச் சென்றனர்.

2017-ல் இங்கிலாந்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை போட்டியில், மிதாலி ராஜ் தலைமையான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. அப்போது மகளிர் அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர் துஷார் அரோத் .பின்னர் அணியின் மூத்த வீராங்கனைகள் பலர் துஷார் மீது சரமாரி புகார் செய்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

தற்போது ஐபிஎல் சீசன்களை கட்டியுள்ள நிலையில், சூதாட்டமும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, நேரலையில் பார்த்துக் கொண்டே, பெட்டிங்கில் ஈடுபடுவது வட மாநிலங்களில் அதிகரித்துள்ளது.

இதே போன்று, வதோதரா நகரில் கபே ஒன்றில் துஷார் அரோத்தும் மற்றும் பலரும் பெட்டிங்கில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது போலீசார் சுற்றி வளைத்தனர்.துஷார் மற்றும் 18 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம், செல்போன்கள் / வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

You'r reading ஐபிஎல் சூதாட்டத்தில் மும்முரம் - இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அதிரடி கைது Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை