உலக கோப்பையில் தோனியா, ரிஷப் பன்டா – கபில் தேவின் தேர்வு யார் தெரியுமா?

by Mari S, Apr 3, 2019, 08:45 AM IST
Share Tweet Whatsapp

ஐபிஎல் ஜூரம் முடிந்தவுடன் உலக கோப்பை கிரிக்கெட் துவங்கவுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில், 4வது இடத்தில் யாரைக் களமிறக்குவது என்ற விவாதங்கள் பெரிதளவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மற்றும் 1983-ம் ஆண்டு இந்தியாவுக்கு முதல் உலக கோப்பையை ஜெயித்துக் கொடுத்த கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், வீரர்களை, இந்த இடத்தில் தான் களமிறங்கி விளையாடும் வீரர் என கருதுவதே தன்னைப் பொறுத்தவரையில் தவறான நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

இப்போதுள்ள காலக்கட்டத்தில், அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆடுகிறார்கள், அவர்கள் எந்த இடத்தில் களம் இறக்கினாலும், ஆட்டத்தின் போக்கை அறிந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், தோனியின் ஆட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ரிஷப் பன்ட் சிறப்பாக செயல்பட்டாலும், அவருக்கான காலம் இன்னமும் இருக்கிறது என்றார்.

ஆல்ரவுண்டர் குறித்து கபில் தேவ் கூறுகையில், தன்னைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் சிறந்த ஆல் ரவுண்டர் என்றால் அது தோனி தான். பவுலர்களை மட்டுமே ஆல்ரவுண்டர் என கருதுவது என்னைப் பொறுத்தவரையில் விக்கெட் கீப்பர், பேட்டிங் மற்றும் அணியை வழிநடத்துதல் என ஆல்ரவுண்டராக தோனி திறம்பட செயல்படுகிறார். அவர் வரும் உலக கோப்பையில் நிச்சயம் அணிக்குத் தேவையான வீரர் என்றார்.

மேலும், ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக இருக்கிறார் என்றும், ரவிந்திர ஜடேஜாவும் சிறந்த ஆல் ரவுண்டர் என்றும் தெரிவித்தார்.

4-ம் இடத்தில் களமிறங்கும் வீரர் குறித்து, முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் ஸ்ரீகாந்த் கூறும்போது, உலக கோப்பைக்கான அணியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தன்னிடம் வழங்கப்பட்டால், நிச்சயம் அதில் ரிஷப் பன்ட் இடம்பெறுவார் என்று கூறினார்.

தோனி மற்றும் ரிஷப் பன்ட் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர் என்பதால், வரும் உலக கோப்பையில், யாருக்கு இடம் கொடுப்பது என்ற விவாதங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தோனிக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தாலும், இளம் வீரர் ரிஷப் பன்ட்-ம் அணிக்குத் தேவையான பலர் கருதுகின்றனர்.


Leave a reply