ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், ஏக ரகளையாக கிண்டல் செய்து ஹர்பஜன் சிங் டிவீட் செய்துள்ளது தல தோனி ரசிகர்களை ஏக உற்சாமாக்கியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக பலமுறை சுழல் ஜாலம் காட்டியவர் ஹர்பஜன் சிங் . சென்னை கிரிக்கெட் ரசிகர்களிடமும் வெகு ஈடுபாடு கொண்ட ஹர்பஜன், அவ்வப்போது தமிழில் டிவீட் செய்து தல தோனி ரசிகர்களை ஏகமாக உற்சாகப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
தற்போதைய ஐபிஎல் சீசனில் முதல் ஆட்டத்தில் கோஹ்லியின் பெங்களூரு படையை புரட்டியெடுத்த சிஎஸ்கே தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதுவும் நேற்று சென்னையில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க தடுமாறியது. தல தோனி கடைசி கட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடி 75 ரன்கள் குவிக்க கவுரவமான இலக்கை எட்டியது. கடைசி ஓவரில் த்ரில் வெற்றியும் பெற்றது.
இந்த வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் ஒரு குட்டிக் கதை போல டிவிட்டரில் வர்ணித்து J பதிவிட்டுள்ளார். ஒரு நாள் ஒரு டீம ஏழு டீம் துரத்த.. அந்த டீம் தடய தாண்டி தோனிய புடிச்சு தொங்க... அந்த தல தோனி மேட்சுல அடி வெளுக்க.. என்னடா இழவு வாழ்க சத்தம்னு மேல பாத்தா ஐபிஎல் கப்பு சிஎஸ்கே தான்னு இருக்க, கப்பாவது மேட் சாவதுன்னு ஏழு டீமும் கும்பிடு போட்டு ஓட... என்று செம கிண்டலாக ஹர்பஜன் பதிவிட்டு சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.