அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில், 7 பைசா குறைந்து 69.12 ஆக உள்ளது.
வெள்ளிக் கிழமை காலையிலேயே இப்படிப்பட்ட நிலைமை வந்துள்ளதை அடுத்து, சந்தை நோக்கர்கள் ரூபாய் மதிப்பை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ரூபாய் மதிப்பு இப்படி திடீர் சரிவானதைத் தொடர்ந்து மத்திய அரசு எதாவது நடவடிக்கை எடுக்கம் என்று கூறப்படுகிறது.
அதுவும் கவனிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் ரூபாய் மதிப்பு, அதிகபட்சமாக 69.0950 அளவுக்கு சரிந்தது. இதையடுத்து தற்போது தான், ரூபாய் மதிப்பு 69.12 என்ற நிலைக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய அனைத்து ஆசிய நாடுகளின் பண மதிப்பும் டாலருக்கு எதிராக இன்று காலை சரிந்துள்ளது. குறிப்பாக யுவான் மதிப்பு, கடந்த ஓர் ஆண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.