வாட்ஸ் அப்பில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிய இந்தியாவில் புதிய சேவையை அந்நிறுவனம் தொடங்கி உள்ளது.
‘வாட்ஸ் அப்’ மூலம் பரவிய வதந்தி செய்திகளால், நாட்டின் பல பகுதிகளில் வன்முறை தாக்குதல் அதிகரித்தது. குழந்தை கடத்தல், பசு கடத்தல் போன்ற வதந்தி செய்திகள் வாட்ஸ் அப்பில் அதிகமாகப் பரவியது. வாட்ஸ் ஆப் தகவல்களை நம்பி, வன்முறை கும்பல்களால் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன.
இதனையடுத்து, போலி செய்திகளை ஊடுருவாமல் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக நோடீஸ் அந்நிறுவனத்து நோடீஸ் அனுப்பியது மத்திய அரசு. அதன்படி, போலி தகவல்கள் அதிகளவில் பரப்பப்படு வதை தடுக்கும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை, வாட்ஸ் ஆப் விதித்துள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி, வதந்திகள் பரவாமல் தடுக்க புதிய சேவை வசதியை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வரும் சந்தேகத்துக்கிடமான ஒரு செய்தியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய, ‘91-9643000888’ என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். ‘செக்பாயிண்ட் டிப்லைன்’ என்று உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பத்தில் பரவும் செய்தி உண்மையானதா? அல்லது போலியானதா? என்பதை அறிந்து வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்படும்.