பண வீக்கத்தால் அதிரடி முடிவுகளை எடுக்கும் ரிசர்வ் வங்கி

by Rahini A, Jun 7, 2018, 18:44 PM IST

ரெபோ ரேட் என்று சொல்லப்படும் ரெபோ விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி 0.25 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.

இது குறித்து இன்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சந்தித்து முடிவெடுத்துள்ளனர். இன்று பிற்பகல் 2:30 மணி போல ரெபோ விகிதம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 0.25 சதவிகிதம் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் 6 சதவிகிதமாக இருந்த ரெபோ விகிதம் இனி 6.25 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த முடிவு 2018- 2019 நிதி ஆண்டுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பண வீக்கம் மற்றும் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட காரணிகள் ரெபோ விகிதம் மாற்றத்தில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ரெபோ விகிதத்தை அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி, `ரிசர்வ் வங்கியின் மானிடரி பாலிசி கமிட்டி தான் இந்த முடிவை எடுத்துள்ளது.

கமிட்டியில் இருக்கும் 6 பேரும் ரெப்போ விகிதத்தை அதிகரிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். உணவு மற்றும் எரிபொருளைத் தவிர மற்ற பொருட்களின் வீக்கம் அதிகமாக இருந்தது. இதுவும் ரெப்போ விகிதத்தை அதிகரிக்க காரணமாக இருந்தது' என்று கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பண வீக்கத்தால் அதிரடி முடிவுகளை எடுக்கும் ரிசர்வ் வங்கி Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை