சென்னையில் குட்கா விற்பனை கடைகள் பெயரை வெளியிட்டு ஸ்டாலின் குற்றச்சாட்டு

gutka business in chennai

Jul 19, 2017, 18:57 PM IST

குட்கா கிடைக்கும் கடைகளின் பெயரை வெளியிட்டு, சென்னையில் குட்கா விற்பனைத் தாராளமாக நடைபெறுவதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் குட்கா விற்பனை

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், '' சென்னையில் எந்த இடங்களில் குட்கா கிடைக்கிறது என மூன்று நாட்களாக ஆய்வு செய்தோம். நேரு ஸ்டேடியம் அருகில் ராஜா ஹோட்டல், அழகப்பா ரோட்டில் உள்ள அசோக் பவன் ஹவுஸ், ஈ.வி.கே.சம்பத் சாலையில் அமைந்துள்ள அருள்மாதா தேனீர் விடுதி, பிக்ளின் ரோடு ஓட்டேரி சத்யா ஹோம் அப்ளையண்ஸ் எதிரில் உள்ள செளத்ரி ஷாட்ஸ், பூந்தமல்லி ரோடு அருகில் உள்ள காஜா ஹோட்டல் போக்ற இடங்களில்ர குட்கா விற்பனைத் தாராளாக நடைபெறுகிறது.

பெண் ஒருவர் போதைப்பொருட்கள் விற்கின்ற புகைப்படம் எங்களிடம் இருக்கிறது. சின்னக் குழந்தைகள் கூட குட்கா விற்பனையில் ஈடுபடுகின்றன. ஆதாரங்களுடன் சட்டமன்றத்தில் பேச முயன்றபோது சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை தடை செய்யப்பட்ட பொருள் ஒன்று கிடைத்தால் காவல் நிலையத்தில் தானே புகார் கொடுக்க வேண்டுமென முதலமைச்சர் கூறுகிறார். காவல்துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்கும் போது, அவர்களிடத்தில் எப்படி கொடுக்க முடியும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

 

More Business News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை