சென்னையில் தொடரும் மழை.. டி20 கிரிக்கெட் போட்டி நடக்குமா?

by எஸ். எம். கணபதி, Dec 14, 2019, 13:35 PM IST
Share Tweet Whatsapp

சென்னையில் மழை பெய்து வருவதால், சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தற்ேபாது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்ெகாண்டிருக்கிறது. மூன்ற டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அந்த அணி வந்துள்ளது. இதில், டி20 தொடரில் 2-1 என்ற வெற்றியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நாளை தொடங்குகிறது.

முதலாவது ஒரு நாள் போட்டி நாளை(டிச.15), சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. ஆனால், இன்று காலை முதல் சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், சென்னை வந்துள்ள இரு அணிகளும் நாளை விளையாடுமா? மழை பெய்து ஆட்டத்தை கெடுத்து விடுமா என்ற கவலை கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 2வது ஒரு நாள் போட்டி வரும் 18ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3வது ஒரு நாள் போட்டி வரும் 22ம் தேதி கட்டாக்கிலும் நடைபெற உள்ளது.

READ MORE ABOUT :

Leave a reply