லட்சுமண் ஸ்ருதி ராமன் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்

by எஸ். எம். கணபதி, Dec 26, 2019, 09:28 AM IST
Share Tweet Whatsapp

சென்னையில் பிரபல இன்னிசைக் குழு உரிமையாளர் ராமன் திடீர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல இன்னிசைக் குழுவான லட்சுமண் ஸ்ருதி, சென்னை மட்டுமின்றி, பல நகரங்களிலும் கச்சேரிகளை நடத்தியுள்ளனர். லட்சுமணன், ராமன் ஆகிய சகோதரர்களே இந்த குழுவை நடத்தி வந்தனர். இந்நிலையில், ராமன் நேற்று(டிச.25) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது இசை உலகிலும், திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசையுலகின் கதா நாயகனாக திகழ்ந்து மக்கள் மனதை கவர்ந்த ராமனின் எதிர்பாரத மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. ரசிகர்களை மீளா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ராமனின் மரணம் இசை உலகிற்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.

மேடை கச்சேரிகளில் தனி முத்திரை பதித்த அவா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகா்களின் இதயத்தில் இடம் பிடித்தவா். எத்தனையோ திமுக நிகழ்ச்சிகளுக்கு துணை புரிந்த ராமன் மறைவு அரசியல் பேரியக்கங்களுக்கும் இழப்பாகும் என்று கூறியுள்ளார்.


Leave a reply