சென்னையில் மீண்டும் பரவுகிறது கொரோனா.. 10 மாவட்டங்களில் அதிக பாதிப்பு.

சென்னையில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. நேற்று மட்டுமே 1348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, சேலம் உள்பட 10 மாவட்டங்களில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில்தான் புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று (அக்.4) 5489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 19,996 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது.


அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5558 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 64,092 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 60 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 9784 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நேற்று புதிதாக 1348 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 146 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 72,773 பேருக்கும், காஞ்சிபுரத்தில் இது வரை 22,536 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 381 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 197 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 37,150 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 33,303 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் 474 பேருக்கும், சேலத்தில் 357 பேருக்கும், திருப்பூரில் 147 பேருக்கும், நீலகிரி 122, நாமக்கல் 165. தஞ்சாவூர் 242, திருவாரூர் 148, கடலூர் 147, வேலூர் 138, கன்னியாகுமரி 117 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் தற்போது 46,120 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 12,283 பேரும், செங்கல்பட்டில் 2599, கடலூர் 1435, கோவை 4888, ஈரோடு 1113, திருப்பூர் 1401, நாமக்கல் 1063, சேலம் 2692, தஞ்சாவூர் 1591 திருவள்ளூர் 1727 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணம் அடைந்து விட்டனர். தமிழகம் முழுவதும் இது வரை 77 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!