வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி புரியும் வெளி மாவட்ட மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதற்காகச் சென்னையில் இருந்து அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டு வரும் 11 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து 14,757 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
சென்னையில் செயல்படும் 13 முன்பதிவு மையங்களில் இதுவரை 27,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது பல்வேறு தரப்பினரும் சொந்த ஊர் சென்றுவிட்டு சமீபத்தில்தான் சென்னைக்குத் திரும்பி உள்ளனர். இந்த நிலையைத் தீபாவளி பண்டிகைக்காக மீண்டும் சொந்த ஊர் செல்வது கஷ்டமான காரியம் என்பதால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சொந்த ஊர் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.