ஸ்ரீவைகுண்டம் அருகே பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை : உறவினர்கள் மறியல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பாஜக பிரமுகர் ஒருவர் இன்று வெட்டி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

by Balaji, Nov 3, 2020, 15:46 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள உள்ள தென்திருப்பேரை கிராமம் கோட்டூர் தெருவைச் சேர்ந்தவர் ராமையா தாஸ். இவர் பாஜகவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இன்று காலை அங்குள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தாசின் உறவினர்கள் குற்றவாளி விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீ வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அதன் பின்னர் ராமையாதாஸின் உடலை உடற்கூறு ஆய்வுக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி ராமையா தாசின் உறவினர்கள் திருச்செந்தூர் நெல்லை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோரின் உறுதி அளித்தனர் இதையடுத்து இரண்டரை மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

More Thoothukudi News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை