குரோர்பதி நிகழ்ச்சி அமிதாப்பச்சன் மீது போலீஸில் புகார்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரசித்தி பெற்ற ஒன்று குரோர்பதி. ஹிந்தியில் பிரபலமான இந்த கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி.பல்வேறு பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டு வெற்றி பெற்றது.

by Balaji, Nov 3, 2020, 15:52 PM IST

ஹிந்தியில் இந்த நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவின் பிதா மகனான நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி வருகிறார்.கடந்த அக்.30 வெள்ளியன்று ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், ''1927ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அன்று, பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எந்த புனித நூலின் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்'' என்று ஒரு கேள்வியைக் கேட்டார். இதற்கு 1. விஷ்ணு புராணம், 2. பகவத்கீதை, 3. ரிக் வேதம், 4. மனு ஸ்மிருதி என்று 4 பதில்கள் கொடுக்கப்பட்டது.

போட்டியாளர்களும் அந்தக் கேள்விக்குச் சரியான பதில், மனு ஸ்மிருதி என விடை அளித்தனர். இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது . இது வெறும் போட்டிக்கான கேள்வியாகப் பார்க்கப்படவில்லை. பல கோடி பேர் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இது போன்ற கேள்விகள் ஜாதி, மத ரீதியாகப் பிளவை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும் இந்த கண்டனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இதுதொடர்பாக இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் ரிஷி குமார் திரிவேதி என்பவர் அமிதாப் மற்றும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது லக்னோ போலீசில் புகார் அளித்துள்ளார் அவர் தனது புகாரில் , கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் மனு ஸ்மிருதி தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வி கண்டனத்திற்கு உரியது. இது சமூகத்தில் சாதி ரீதியிலான வேற்றுமைகளை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், டிவி சேனல், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.என்ன செய்ய? இப்படி ஆகிப் போச்சே என்று கையை பிசைந்து கொண்டு இருக்கிறது குரோர்பதி டீம்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை