கொந்தளிக்கும் ஆரி,பாலா - சனம் மோதல்-பிக் பாஸின் 30வது நாள்

Advertisement

முந்தைய நாளின் தொடர்ச்சியாக ஆரம்பமானது. சுச்சியுடன் ஹவுஸ்மேட்ஸ் பலரும் தனியாக பேச தொடங்கினர்.

ரியோவுக்கு சுச்சி சொன்ன ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதை நேரடியாக கேட்டார். உங்க பார்வைக்கு தப்புனு தோண்ற விஷயத்துக்கு குரல் கொடுங்க. யார் எந்த சைட்னு பார்க்காம முடிவெடுங்க. உங்க கூட இருக்கற நிஷாவுக்கு தனிப்பட்ட முறையல முடிவெடுத்து விளையாட சொல்லுங்க. சுச்சி சொன்னதுல இந்த ரெண்டு பாயிண்டும் முக்கியமான பாயிண்ட். ரியோவுக்கு தெளிவா புரிஞ்சுருக்குனு அவர் நிஷா கிட்ட பேசும் போது தெரியுது. (அன்சீன்ல இருக்கு).

அடுத்து சுரேஷ்.. சுச்சிக்கு ஏற்கனவே அறிமுகம் இருக்கும் போல. சக்கரவர்த்திங்கற பேரை சாக்ஸ்னு கூப்பிடறாங்க. சுரேஷ் பத்திய அவதானிப்பும் ஓரளவுக்கு சரியாவே இருந்தது. சுரேஷ் முன்ன மாதிரி தன்னோட கருத்துல ஸ்ட்ராங்கா இருக்கறதில்லை. அவங்க கூட்டணியை உடைக்கறது தான் என்னோட இப்போதைய ஸ்டேட்டர்ஜினு சொல்றாரு சுரேஷ்.

அடுத்து டைனிங் டேபிள் மீட்டிங். அர்ச்சனா கேப்டன்ஷிப் முடிஞ்சு எல்லாருக்கும் நன்றி சொல்றாங்க. (அன்சீன்). அவங்க வந்த 3 வாரத்துல இந்த வார வெசல் வாசிங் டீம் தான் பெஸ்ட்னு சொல்லி பாராட்டறாங்க. அதுக்கு அப்பவே ஆரி அஞக்ட் செய்யறாரு. ஒரு டீம் மட்டும் பெஸ்ட்னு சொன்னீங்கன்னா, அப்ப நாங்களும் வேலை பார்த்துருக்கோம்னு சொல்லி அர்ச்சனாவோட விவாதத்துக்கு போறாரு. (இதை இங்க குறிப்பிட காரணம், முந்தின நாள்ல இருந்தே ஆரி ஒரு விதமான கொந்தளிப்போட தான் இருக்காரு. )

காலை உணவு சாப்பிடறதை பத்தி பேசும் போது மீண்டும் பிரச்சினை. இந்த தடவை சம்முவோட வொர்க் அவுட் செஞ்சு முடிச்சுட்டு வந்து தான் சாப்பிடுவேன்னு ஆரி சொல்லவும், நீங்க இங்க வந்தது வொர்க் அவுட் பண்றதுக்கு இல்லைனு கவுண்ட்டர் கொடுக்கறாங்க. தனியா எடுத்து வைங்க, நான் ஹீட் பண்ணி சாப்ட்டுக்கறேன்னு சொல்லி அப்போதைக்கு அந்த பிரச்சினையை முடிக்கறாங்க.

புது கேப்டன் சாம் 2 புதிய விதிமுறைகளை கொண்டு வராங்க. இந்த வீட்ல குரூப்பிசம், பேவரட்டிசம் இருக்குனு புகார்கள் இருக்கு. அதனால காலையில இந்த வீட்ல இருக்கற எல்லாருக்கும் எல்லாரும் கை கொடுத்து, இல்ல கட்டி பிடிச்சு அன்பை பரிமாறிக்கனும். . (ஹக் பண்றதை தமிழ்ல எப்படிய்யா சொல்றது). இந்த இடத்துல சோமை காட்டிருக்கனும். என்னத்த எடிட்டிங் டீமோ?.

அதில்லாம இதுவரைக்கும் பேசாத, அண்டர்ஸ்டாண்டிங் இல்லாதா ரெண்டு பேர் கூட 5 நிமிஷம் உக்காந்து பேச முயற்சி செய்ங்கனு சொன்னதும் நல்ல விஷயம்.

அடுத்து சுச்சியோட ஒன் டு ஒன் மீட்டிங். இந்த முறை அனிதா. இங்க இருக்கறதுலேயே நீங்க தான் ஸ்ட்ராங் கண்டஸ்டண்ட்னு ஒரு ஐஸ் லாரியவே தூக்கி அனிதா தலையில் வச்சுட்டாங்க சுச்சி. இந்த வீட்டுக்குள்ள தன்னை பத்தி ஒரு பிம்பம் கற்பனை பண்ணி வச்சுருக்காங்க அனிதா. அதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லாம சுச்சி ஒத்துகிட்டது நமக்கும் அதிர்ச்சி தான். ஏற்கனவே கமல் சாரும் பாராட்டிட்டாரு, சுச்சியும் தப்பே இல்லைனு சொல்லிட்டதால, அனிதாவை இந்த வாரம் கையில பிடிக்க முடியாது. இன்னொரு விதத்துல பார்த்தா நிறைய குழப்பத்துல இருந்தவங்க, அதிலிருந்து வெளிய வந்து பாசிட்டிவா நடந்துக்க வாய்ப்பிருக்கானு வெயிட் பண்ணி பார்ப்போம்.

மீண்டும் சாம் vs ஆரி

அதே கிச்சன் ப்ராப்ளம். அதே ஆரி. தன்மேல ஒரு குற்றச்சாட்டு வச்சாங்கன்னா, "இங்க நான் மட்டும் தான் அப்படியா? மத்தவங்க எல்லாரும் என்னன்ன செய்யறாங்கனு நான் லிஸ்ட் போடட்டுமா? னு கேக்கறது தான் ஆரியோட விவாதமே. எந்த குற்றச்சாட்டு சொன்னாலும் ஆரி எடுத்து விகற கவுண்ட்டர் பாயிண்ட் இது தான். அதாவது இங்க நான் மட்டும் தப்பு செய்யல, ஆனா நான் மட்டும் தான் மாட்டிக்கறேன். அப்படியான ஸ்டேட்மெண்ட் தான் இது. ஒவ்வொரு முறையும் அடுத்தவங்க மேல குறை சொல்றதை கேட்டு கேட்டு சலிச்சு போச்சு. டைனிங் டேபிள்ல பேசினதுக்கு சாம் மன்னிப்பு கேட்டும் ஆரி அதை விடறதா இல்ல. ஆரி நேர்மையாளர்னு தயவுசெய்து யாரும் சொல்லாதீங்க. அதுக்கான எந்த இலக்கணமும் அவர்கிட்ட கிடையாது.

இரவு தொடர்ந்தது, பாலாவும் சனமும் வெளிய நடந்துட்டு பேசிட்டு இருக்காங்க. எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கல, நீ பேசும் போது எரிச்சலா வருது. உனக்கெல்லாம் நான் ஸ்டேட்டர்ஜி யூஸ் செஞ்சதே இல்லை. ஏன்னா நீ என் லிஸ்ட்லேயே இல்லைனு சனம் கிட்ட சிரிச்சுட்டே சொல்லிட்டு இருந்தான் பாலா. சனமும் அதை சிரிச்சுட்டே தான் கேட்டுட்டு இருந்தாங்க. போன வாரம் நீ எப்படி தப்பிச்சனு தெரியல, சீக்கிரமா இந்த வீட்டை விட்டு கிளம்பு, அப்ப தான் நான் நிம்மதியா இருப்பேன்னு பாலா ஜாலியா சொல்றாரு. யோ கோ மேன்.... வொய் மீ - அப்படினு சொல்லிட்டு பாலாவை செல்லமா பின்னாடி ஒரு ஒதை ஒதைக்கறாங்க சனம். பாலாவும் அதை பெருசா எடுத்துக்கலை.

அடுத்து சுச்சியோட மீட்டிங் ராஜமாதா அர்ச்சனா. பாலாவுடனான செண்டிமெண்ட் பார்ட் ரொம்ப முரண்பாடா இருந்ததுனு நேரடியா தாக்கினாங்க சுச்சி. பாலா உங்க சண்டை போட்டுட்டு வெளிய வந்து பீல் பண்ணிட்டு இருக்கும் போது, உள்ள எல்லாரும் பாலாவை கிண்டல் பண்ணிட்டு இருந்தீங்க. அப்புறம் ரெண்டு நிமிஷத்துல எப்படி, நீ எனக்கு புள்ளையா வேணும்னு" சொல்ல முடியும்னு சுச்சி கேட்ட போது நமக்கே ஆச்சரியமா தான் இருந்தது. அம்மா செண்டிமெண்ட்னு சொல்லி பாலாவை நீங்க அரெஸ்ட் பண்ணிவச்சுருக்கீங்கனு ஒரு குற்றச்சாட்டும் வச்சாங்க.

அங்க பாலாவும் இருந்ததால, இனிமே என்னை அம்மாவா பார்க்காதடானு இன்ஸ்டண்ட் முடிவெடுத்தாங்க அர்ச்சனா. அவங்களை பொறுத்தவரை ஆனா அந்த மடம் ஆகாட்டி இந்த மடம்னு சொல்லுவாங்க இல்ல, அந்த மாதிரி. கிச்சன் டீம் பத்தி புகார் சொன்னா உடனே, இனிமே கிச்சன் பக்கம் போனா என்னை செருப்பால அடினு ஆன் தி ஸ்பாட் முடிவெடுப்பாங்க. சமையல் பத்தின பேச்சு வந்தப்போ, இனி சமையல் பக்கம் போனா என்னை என்னான்னு கேளுனு சொல்லுவாங்க. இதுவும் அதே மாதிரி. எதிராளி இதுக்கு மேல பேசவே முடியாது.

அர்ச்சனா vs சுச்சி ஏற்கனவே அறிமுகம் இருந்தாலும், ஒரே உறைல ரெண்டு கத்தி கதை தான் வரும். ஆரம்பத்துலேயே ரெண்டு பேருக்கும் முட்டிகிச்சு.. இனி வெடிக்கும்.

நள்ளிரவு 3.30. சுச்சி + சுரேஷ், இடம் லிவிங் ஏரியா. அன்புஸ்டேட்டர்ஜியா இருந்தாலும் வாங்கிக்கோங்கனு கமல் சார் சொன்னது, அர்ச்சனாவை மனசுல வச்சு தான். ஆனா அது அர்ச்சனாவுக்கு புரியல. பாலாக்கு நல்லாவே புரிஞ்சுருச்சு. இதை பத்தி கமல் சார் சொல்றதுக்கு முன்னாடியே ஷிவானி கிட்ட பேசிட்டாரு பாலா. அந்த விஷயத்தை மறுபடியும் சுச்சி கிட்ட டிஸ்கஸ் பண்றாரு. ஷிவானி, சனம் ரெண்டு பேரும் பாலா பின்னாடி இருக்கறதை சுட்டி காட்டினது நல்ல விஷயம்.

அதிகாலை 5.10. விடிய விடிய பேசிட்டே இருந்துருக்காங்க. சுரேஷ், பாலா, சுச்சி. பாசிங் தி பாக்ஸ்னு ஒரு கேம் நடந்தது. அதுல சுரேஷ் தான் வின் பண்ணினாரு. ஆனா அந்த கேம்ல சாமும் பாலாவும் சேர்ந்து தான் சுரேஷை வின் பண்ண வச்சதா இப்ப சொல்றாரு பாலா. அந்த கேம்ல யார் வின் பண்ணனும், வெளிய போகனும்னு எப்படி பாலா முடிவெடுக்க முடியும்னு தெரியலை. ஆனா இது பாலா கிட்ட இருக்கற ஒரு கெட்ட பழக்கம். தற்செயலான சில விஷயத்தை கூட நான் தான் செஞ்சேன்னு சொல்லி கிரடிட் எடுத்துக்கறாரு. ஆனா பாலா இப்படி சொன்னதை சுரேஷ் ரசிக்கவே இல்லைனு அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது. இது நேத்தோட முதல் பஞ்சாயத்து.

நாள் 30

என் உச்சி மண்டைல சுர்ருங்குது பாட்டு போட்டு எழுப்பினாங்க. ஆனா இது ஒரு குறியீடு பாட்டுனு அப்ப தெரியல. விடிய விடிய பேசிட்டு கவுந்தடிச்சிட்டு தூங்கிட்டு இருந்தான் பாலா. டான்ஸ் ஆட வரலைனு ஒரு ஜோடிக் கண்கள் பாலாவை பார்த்துக் கொண்டிருந்தது.

அந்த ஜோடிக் கண்கள் யாருனு பாலாவுக்கு பக்காவா தெரிஞ்சுருந்தது. கேப்டன் சாம் கூட பேசும் போது இதை சுட்டி காட்டி பேசினார். அப்ப சாம் சொன்ன விஷயம் தான் அட்டகாசமான ஹைலைட். சுச்சி சொல்ற விஷயங்களை நேரடியா எடுத்துக்காம Pinch of Salt ஆ எடுத்துக்கோங்கனு அழகா சொன்னாங்க. Pinch of Salt னா என்னான்னு கூகிள் பண்ணி பார்த்தேன்.

"யாரோ ஒருத்தர் சொல்ற விஷயங்களை அப்படியே நம்பக்கூடாது. அந்த விஷயங்கள் கண்டிப்பா உண்மையா இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. "எவ்வளவு சூப்பரான மேட்டர் இல்லை. இந்த இடத்துல சுச்சியை எந்த விதத்திலேயும் குறைச்சு பேசலை. ஆனாலும் அவங்க சொல்ற விஷயங்களை, நம்ப வேண்டாம்னு எவ்வளவு நாசூக்கா சொல்றாங்க பாருங்க. நாளுக்கு நாள் சாம் உயரத்துக்கு போய்ட்டே இருக்காங்க.

என்னிக்கும் இல்லாத திருநாளா மார்னிங் டாஸ்க் காட்டினாங்க. என்னடானு யோசிக்கும் போது தான் தெரிஞ்சுது, ரெண்டாவது பஞ்சாயத்துக்கு விதை அங்க தான் இருக்குனு.

ஆஜித் தான் மார்னிங் டாஸ்க் பண்ணிட்டு இருந்தான். ஏதோ சொல்ல வந்த போது, பாலாவும் - சனமும் தொண தொணனு ஏதோ பேசிட்டே இருந்தாங்க. ஆஜித் பேசும் போது, பாலா, சனம் பேசறதும் நமக்கு கேட்டுது. இவங்க பேசறதை கேட்டு எரிச்சலான ஆஜித், அந்த இடத்துல ரெண்டு பேரையும் திட்டறான். அப்ப சனம் மட்டும் எந்திரிச்சு போறாங்க. டாஸ்க்கும் முடியுது.

உள்ள சனம் கிட்ட சாரி கேட்டுட்டு இருந்தான் ஆஜித். திட்டினது ரெண்டு பேரையும் தான், ஆனா உங்களை மட்டும் திட்டினா மாதிரி போர்ட்ரே ஆகிடுச்சுனு சாம் கூட சொல்லவும் சமாதானம் ஆனாங்க. அப்பவே சாம் கிட்ட ஒரு கம்ப்ளையிண்ட் பண்றாங்க. பாலா தன்னை "தறுதலை"னு கூப்பிட்டான்னு, அது தேவையில்லாத வார்த்தைனு சொல்லிட்டு இருந்தாங்க. அப்பவும் சாம் கொஞ்சம் சமாதானபடுத்தி அனுப்பறாங்க.

கொஞ்ச நேரம் கழிச்சு பாலா கிச்சன்ல இருக்கும் போது திரும்ப வந்த சனம், அங்க இருக்கற எல்லாருக்கும் கேக்கறா மாதிரி, " தறுதலைனா என்ன அர்த்தம்னு கேக்கவும், உதவாக்கரை, யூஸ்லெஸ்னு அங்கிருக்கறவங்க ட்ரான்ஸ்லேட் செய்யறாங்க. இந்த வார்த்தையை சொல்லி பாலா என்னை திட்டிட்டான்னு பொதுவுல சொல்லி, பாலா கூட சண்டைக்கு ரெடியாகறாங்க. பாலாவுக்கு ஆரம்பத்துல ஜெர்க் ஆனாலும், அதை கண்டுக்காம நிஷா கூட பேசிட்டு இருக்கார். ஆனா அந்த பக்கம் சனம் நான் ஸ்டாப்பா பேசிட்டே போறாங்க. ஒரு கட்டத்துல சனம் நம்மளை வச்சு கண்டண்ட் கொடுக்க ட்ரை பண்றாங்கனு புரிஞ்ச உடனே பாலாவும் சண்டைக்கு போறாரு.

நேத்து நைட் நல்லா ஜாலியா பேசிட்டு இருந்துட்டு, காலையிலேயும் பேசிட்டு இருந்துட்டு, திடீர்னு சண்டைக்கு வந்து நின்னது பாலாவுக்கு அதிர்ச்சி தான். இந்த விஷயத்தை இவ்வளவு பெரிய பிரச்சினையா செய்ய வேண்டியதில்லை. கேப்டன் கிட்ட கம்ப்ளையிண்ட் பண்ணி, பாலா கூட உக்காந்து பேசிருக்கலாம். ஆனா. சனம் அப்படி செய்யல. அவங்களுக்கு இந்த பிரச்சினை பெருசாக்கானும்னு இருந்துருக்கு. அது பாலாவுக்கு தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்.ரெண்டு பேரையும் அமைதிப்படுத்த சாம் எவ்வளவோ முயற்சி செஞ்சும் ஒன்னும் நடக்கலை.

ஒரு கட்டத்துல சனம் பெட்ரூம்ல இருக்கும் போது ஆத்திரம் அடங்காத பாலா, மறுபடியும் போய், தற்தலைனு திட்டவும், அங்கிருந்த ஆரியும், அனிதாவும் பாலாவை தப்புனு தடுக்கறாங்க. அந்த இடத்துல பாலா நியாயம் கேக்கறது அனிதாவை பார்த்து கேக்கறாரு. ஆனா அங்கிருந்த ஆரி பதில் சொல்றது பாலாவுக்கு எரிச்சலை கொடுக்குது. சனமோட சண்டை போட வந்து ஆரியோட சண்டையா முடியுது. என் கூட பேசாதீங்கனு பாலா சொல்லியும் ஆரி நிறுத்தவே இல்லை. அங்கிருந்த அனிதாவை பேச விடவே இல்லை.

நாமினேஷன் நடக்குது. இந்த வாரம் நாமினேஷன் ப்ராப்பர்டிகளே நிறைய பேர் இருக்காங்க. சுரேஷ், பாலா, அனிதா, சனம், அர்ச்சனா, ஆரி, சோம் தான் இந்த வார லிஸ்ட்.

நாமினேஷன் முடிஞ்ச உடனே ரூம்ஸ் எல்லாம் க்ளீன் செய்யனும்னு ரமேஷ் வந்து கேக்க அது விஷயமா க்ளீனிங் டீம் கேப்டன் ஆரி கிட்ட பேசறாங்க சாம். இதுல இன்னொரு பஞ்சாயத்து இருந்தது. அதாவது போன வார டீம் நேத்து வேலை செய்யல. அதனால தான் குப்பையா இருக்கு. போன வாரம் இருந்தவங்களை க்ளீன் பண்ணி ஹாண்டோவர் செய்யச் சொல்லுங்கனு ஆரி டிமாண்ட் செய்யறாரு. அதுக்கு சாம் முடியாதுனு சொல்ல வாக்குவாதம் பெருசாகுது.

ஆரி சொல்றதை நியாம்னே வச்சுக்குவோம். அவர் நேரா கேப்டன் கிட்ட போய்ட்டு, இந்த மாதிரி இருக்கு, போன வார டீமை கிளின் பண்ணி ஹேண்ட் ஓவர் செய்ய சொல்லுங்கனு டிஸ்கச் பண்ணிருந்தா அது நியாயம்னு சொல்லலாம். கேப்டன் பதவிக்கு இங்க ரெஸ்பெக்ட் கொடுத்தாகனும். அதை கூட செய்யாம ஆரி பேசறது ரொம்ப தவறான விஷயம். கேப்டன் ஆகி ஒரு நாள் கூட ஆகாத ஒருத்தரை பார்த்து நீங்க ஒன்சைடா இருக்கீங்கனு அக்யூஸ் பண்றாரு.

முந்தா நாள் நைட்ல இருந்தே ஒரு விதமான கொந்தளிப்பா இருக்காரு ஆரி. அர்ச்சனா கூட பிரச்சினை, சாம் கேப்டன் ஆனதுக்கு அப்புறம் 3வது தடவையா அவங்க கூட சண்டை போடறாரு. பாலா கூட பிரச்சினை. இதில்லாம இந்த வார நாமினேஷன் வேற, எல்லாம் ஒன்னா சேர்ந்ததால ஆரி கொஞ்சம் விரக்தில இருக்காருனு நினைக்கிறேன்.

இதுக்கு நடுவுல சுரேஷும் ஒரு பஞ்சாயத்தை தொடங்கிருக்காரு. அதுவும் கூடிய சீக்கிரம் வெடிக்கும்.

Advertisement
மேலும் செய்திகள்
hindi-bigg-boss-14-new-strategy
எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..
aari-updates-in-bigg-boss
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..
biggboss-season-4-winner-updates
பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..
suresh-chakravarthy-reason-for-not-coming-in-bigg-boss
மொட்டை தாத்தாவை தெரிந்தே ஒதுக்கியதா விஜய் டிவி?? சலசலக்கும் நெட்டிசன்கள்..
what-happened-in-promo3-biggboss
மீண்டும் பிக் பாஸில் அழுகை குரல்.. நடிகை ரேகாவின் உருக்கமான பதிவு.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..
what-happened-in-bigg-boss-on-98thday
டிக்கட் டூ பினாலே வின்னர் சோமு.. ஆரி சேவ் என அறிவித்த கமல்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-93-review
தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93
what-happened-in-biggboss4-on-92th-day
கடைசி வார நாமினேஷன்.. டிக்கெட் டூ பைனல் டாஸ்க்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
what-happend-in-biggboss-on-91th-day
ஆண்டவர் வருகை.. ஆஜித் வெளியேற்றம்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
bigg-boss-4-day-90-review
ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90
/body>