ஆவோஜி.. ஆவோஜி.. சந்தோஷ் நாராயணன் குரலில் மெஹந்தி சர்கஸ் பாடல் ரிலீஸ்

Avoji song released from Mehandhi circus Movie

by Isaivaani, Jan 17, 2019, 11:39 AM IST

ராஜூ முருகன் எழுத்தில் விரைவில் வெளியாக இருக்கும் மெஹந்தி சர்கஸ் படத்தின் பாடல் ஒன்று இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

குக்கூ, ஜோக்கர் என வெற்றிப்படங்களை இயக்கிய ராஜூ முருகன் அடுத்ததாக மெஹந்தி சர்கஸ் என்ற படத்தை எழுதியுள்ளார். இந்த படத்தை சரவண ராஜேந்திரன் இயக்கி உள்ளார்.

மெஹந்தி சர்கஸ் படத்தில் அறிமுக நாயகனாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஸ்வேதா திரிபாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களை தவிர, ஆர்.ஜே.விக்னேஷ், வேலா ராமமூர்த்தி ஆகியோர் ஆதரவு வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூயோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மெஹந்தி சர்கஸ் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 6ம் தேதி படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி இப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி ஹிட்டானது.

இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் குரலில் ஆவோ ஜி.. ஆவோ ஜி.. என்ற பாடலை ஸ்டூயோ கிரீன் இன்று வெளியிட்டுள்ளது.

You'r reading ஆவோஜி.. ஆவோஜி.. சந்தோஷ் நாராயணன் குரலில் மெஹந்தி சர்கஸ் பாடல் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை