உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே.. ஜன.24-ல் இசை வெளியீடு!

Kanne kalaimaane movie songs release date announced

by Isaivaani, Jan 22, 2019, 13:02 PM IST

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் கண்ணே கலைமானே படத்தின் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படத்தை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை வைத்து கண்ணே கலைமானே என்ற படத்தை இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியான்ட் தயாரித்துள்ள இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு இந்த படத்தின் ஷ¨ட்டிங் தொடங்கி 45 நாட்களில் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்த நிலையில், கண்ணே கலைமானே வரும் பிப்ரவரி 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரமுத்துவின் வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் வரும் 24ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading உதயநிதி ஸ்டாலினின் கண்ணே கலைமானே.. ஜன.24-ல் இசை வெளியீடு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை