பணம் தரலனு மோசமா விமர்சனம் பண்ணினார் - ப்ளூ சட்டை மாறன் மீது போலீசில் புகார் கொடுத்த பிரபல இயக்குநர்!

Police complaint against blue sattai maran

by Sasitharan, Jan 28, 2019, 22:26 PM IST

ப்ளூ சட்டை மாறன் இந்தப் பெயர் இணையதள வாசிகள் மத்தியில் நல்ல அறிமுகம் உண்டு.

தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு யூடியூப் மூலம் விமர்சனம் செய்து வருகிறார் இந்த மாறன். பொது வெளியில் அதிகம் தெரியப்படாதவராக இருந்த இவர், நடிகர் அஜித்தின் விவேகம் படத்துக்கு விமர்சனம் செய்ததன் மூலம் அதிகம் அறியப்பட்டார். விவேகம் படத்தை மோசமாக ரிவீயூ செய்ததாக அஜித் ரசிகர்கள் இவரை வறுத்தெடுத்தனர்.

இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சார்லி சாப்ளின் 2 திரைப்படத்துக்கு மோசமாக விமர்சனம் செய்ததாக ப்ளூ சட்டை மாறன் மீது இயக்குநர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், "ஷக்தி சிதம்பரமாகிய நான் 25 ஆண்டுகளாக பல்வேறு வெற்றிகரமான திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் தமிழ்த்துறையில் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறேன். என்னுடய இயக்கத்தில் கடந்த 26-ம் தேதி வெளியான சார்லி சாப்ளின் படத்தை மிகக் தரக்குறைவான வகையில் விமர்சனம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். சட்டை மாறனிடம் அலைபேசியில், ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமை உள்ளது. இயக்குநர், தயாரிப்பாளர் உட்பட படத்தின் ஒட்டு மொத்த குழுவையும் ஒருமையில் கேவலமாக பேசியதையும் கடும் சொற்களை உபயோகப்படுத்தியதையும் வாபஸ் பெற வேண்டும் என்று நாகரிகமாக கேட்டேன்.

ஆனால் அவர் இந்த நிகழ்ச்சி மூலம் நிறைய விளம்பரம் போட்டு சம்பாதிக்கிறேன். எனக்கு லாபம் கிடைக்க என்ன வேணும்னாலும் பண்ணுவேன் உன்னால் முடிஞ்சா பாத்துக்கோ என மோசமான வார்த்தைகளில் பேசினார். மேலும் என்னை காலிபண்ணிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவரது தமிழ் டாக்கீஸ் யூடியூப் பக்கத்தை உடனடியாக முடக்கி அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

You'r reading பணம் தரலனு மோசமா விமர்சனம் பண்ணினார் - ப்ளூ சட்டை மாறன் மீது போலீசில் புகார் கொடுத்த பிரபல இயக்குநர்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை