எனக்கு பணத்துமேல ஆசை - விஷாலின் `அயோக்யா டீசர் ரிலீஸ்!

actor vishals ayokya teaser released

by Sasitharan, Feb 6, 2019, 19:21 PM IST

நடிகர் விஷாலின் அயோக்யா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஷால் நடித்துவரும் படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்குகிறார். விஷால் ஜோடியாக தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வரவான ராஷி கண்ணா நடிக்கிறார். விஷால் போலீசாக நடிக்கும் இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸுடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்க நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர்கள், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் நடிகை சோனியா அகர்வால் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் அறிவிக்கப்பட்ட உடனே சர்ச்சையை கிளப்பியது. காரணம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் பீர் பாட்டிலுடன் விஷால் அமர்ந்திருந்தது தான்.

விறுவிறுப்பாக நடைபெற்ற வந்தது இதன் படப்பிடிப்பு. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க வேலைகளுக்கு மத்தியில் இந்த படத்திலும் நடித்து வந்தார் விஷால். இந்நிலையில் படத்தில் டீசர் இன்று வெளியாகியுள்ளது. பார்த்திபனின் வில்லத்தனம், விஷாலின் சண்டை காட்சிகள், சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை என படத்தின் டீசர் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. டீசரை தனது ஆசான் ஏ.ஆர்.முருகதாஸை வைத்து வெங்கட் மோகன் வெளியிட வைத்துள்ளார்.

 

You'r reading எனக்கு பணத்துமேல ஆசை - விஷாலின் `அயோக்யா டீசர் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை