சாவித்திரியாக நடித்தார்.. சாவித்திரியாகவே மாறினார்..கீர்த்தி சுரேஷ்

by Isaivaani, Jan 23, 2018, 21:09 PM IST

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. தமிழில் ‘நடிகை திலகம்’ என்றும், தெலுங்கில் ‘மகாநடி’ என்றும் இப்படத்திற்கு பெயர்கள் கைவக்கப்பட்டுள்ளன.

வைஜெயந்தி மூவீஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை எவடே சுப்ரமணியன் படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார்.

மறைந்த நடிகையர் திலகமான சாவித்திரியாக நடிகை கீர்தத் சுரேஷ் நடித்து வருகிறார்.

நடிகை சாவித்திரி படங்களில் நடிக்கும்போது, உடன் பணிப்புரிபவர்களுக்கு தங்க காசு அன்பளிப்பாக அளிப்பாராம். அதன்படி, நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவே மாறியிருக்கிறார்.

நடிகை சாவித்திரியின் செயலை தற்போது கீர்த்தி சுரேஷூம் தன்னுடன் நடித்தவர்களுக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்திருக்கிறார். சாவித்திரியின் அந்த குணத்தை கீர்த்தி சுரேஷ் நிஜவாழ்கையிலும் செய்துகாட்டியிருக்கிறார்.
நடிகை சாவித்திரி போன்று கெட்டப் மாற்றினார்.. சாவித்திரியாக நடித்தார்.. இப்போ சாவித்திரியாகவே மாறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.. நல்ல விஷயம் தானே..

You'r reading சாவித்திரியாக நடித்தார்.. சாவித்திரியாகவே மாறினார்..கீர்த்தி சுரேஷ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை