`அட்டகத்தி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா ஆக்ஷன் ஹீரோயினாக புதிய அவதாரம் எடுக்கிறார்.
நடிகை நந்திதா ஸ்வேதா முதல் முறையாக ஆக்சன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘ஐ.பி.சி. 376’. முழுக்க முழுக்க ஆக்ஷன் நிரம்பியிருக்கும் படமான இதற்கு சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்ஷன் கோரியோகிராஃபி செய்திருக்கிறார்.
பெண்களை மையமாக்க வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பெண்களுக்கு முக்கியதுவம் வாய்ந்த கதையை தேர்வு செய்து வித்தியாசமான ஒரு கேரக்டாரில் நந்திதா நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபகாலமா பெண்களை இழிவுபடுத்தி வந்துகொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இது பெண்களை கொண்டாட வேண்டிய படமாக உருவாகி வருகிறது. பிரபுசாலமன், பாலசேகரன் உள்ளிட்ட இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் துணை இயக்குநராக வேலைப்பார்த்த ராம்குமார் சுப்பாராமன் இந்த படத்தை இயக்குகிறார்.
பிரபல விநியோகஸ்தர் எஸ். பிரபாகர் இந்த படம் மூலமாக தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிரார். இந்த படம் தமிழ் தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகி கொண்டிருக்கிறது. த்ரில்லர் கதையான `ஐ.பி.சி. 376’ -இல் யூகிக்க முடியாத பல சஸ்பன்ஸ் நிறைந்திருக்குமென்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஐபிசி 376 என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் குற்றங்களை குறிக்கும்.