ஜொலிஜொலித்த சாயிஷா… பூரிப்பில் ஆர்யா.. வாழ்த்துகள் மணமக்களே

ஹைதராபாத்தில் நேற்று மாலை பிரமாண்டமான முறையில் நடந்த ஆர்யா -  சாயிஷா திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்யா


கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான  நடிகர் ஆர்யாவுக்கு  கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியில் மணப்பெண் தேடல் நிகழ்ச்சி நடந்தது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள 16 பெண்கள் விருப்பம் தெரிவித்த நிலையில் நிகழ்ச்சியின் கடைசி நாளன்று மணமகளாக அவர் யாரையும் தேர்வு  செய்யவில்லை.

இந்நிலையில்  பாலிவுட்  நட்சத்திர தம்பதியான திலீப் குமார், சாயிரா பானுவின் பேத்தி சாயிஷாவுக்கும்ஆர்யாவுக்கும் இடையே காதல் என்று கிசுகிசு வெளியானது. சாயிஷா தமிழில் வன மகன் படத்தில் அறிமுகமானார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு  ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஆர்யா “நானும் சாயிஷாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்’’ என்று  அதிகாரபூர்வமாக  அறிவித்தார்.



ஆர்யா சாயிஷா

இதனையடுத்து ஆர்யா-சாயிஷா திருமண நிகழ்ச்சிகள் நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்வில் பாலிவுட்  நடிகர்கள் பலர்  பங்குபெற்றனர். நேற்று மாலை அதே ஓட்டலில் ஆர்யா - சாயிஷா திருமணம் நடந்து முடிந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து திரையுலகினரும் மணமக்களை மனதார வாழ்த்தினர். அவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சாயிஷா சிவப்பு நிற பிரமாண்ட ஆடையில் ஜொலிக்கிறார்.