ஓடனுமா இல்ல ஓட விடணுமா? – மிரட்டும் சிந்துபாத் டீசர்

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி'  ஹிட்  உள்ளிட்ட திரைப் படங்களை  இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து `சிந்துபாத்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி

இந்த படத்தில்   விஜய் சேதுபதிக்கு  ஜோடியாக நடிகை  அஞ்சலி  நடித்துள்ளார். இப்படத்தை ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன்சங்கர்  ராஜா  இசையமைத்துள்ளார்.

சிந்துபாத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு  ஜனவரி 16 ஆம்தேதி  வெளியானது. விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நல்ல ட்ரீடாக அமைந்தது. சிந்துபாத் படத்தின் இரண்டாவது  லுக்  கடந்த வாரம் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்று  சிந்துபாத் படத்தின் டீசர் வெளியாகி  பட்டையைக் கிளப்புகிறது.  இந்த படத்தில் தான்  முதல்முறையாக விஜய் சேதுபதியின் மகன்  சூர்யா நடித்துள்ளார். டீசருக்கு மக்களிடம் இருந்து செம ரெஸ்பான்ஸ்.

சிந்துபாத் டீசர்.. https://www.youtube.com/watch?v=AjM_bTcZ4Ng