புதுடெல்லி: பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பத்மாவத் திரைப்படத்தின் வசூல் விரைவில் 100 கோடி ரூபாயை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபிகா படுகோனே நடிப்பில் பல்வேறு தடைகளை கடந்து கடந்த வியாழக்கிழமை பத்மாவத் படம் வெளியானது. ஆனால், தணிக்கை சான்றிதழ் பெற்றும் இந்த படத்தை வெளியிட குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்கங்கள் மறுத்துவிட்டன.
அரியானா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் சில திரையரங்கங்கள் மட்டுமே படத்தை வெளியிட்டன.
இந்நிலையில், பத்மாவத் படம் வெளியான முதல் நாளன்று இந்திய அளவில் ரூ.19 கோடி வசூல் செய்தது. தொடர்ந்து, இரண்டாவது நாளன்று வசூல் ரூ.30 கோடியாக அதிகரித்தது. நேற்றுவரை ரூ.49 கோடி வசூலில் குவித்துள்ள பத்மாவத் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் ரூ.50 கோடியை எட்டிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா தவிர பல வெளிநாடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் பத்மாவத் படம் வெளியாகி நல் வரவேற்பை பெற்று வருகிறது. இதானல், இந்த படம் மிகப் பெரிய சாதனையை உருவாக்கும் என பாலிவுட் வாட்டாரங்கள் கருதுகின்றன.