உலகை திரும்பிப் பார்க்க வைத்த சென்னை சிறுவன்! – பாராட்டு விழா எடுத்த ஏ.ஆர் ரஹ்மான்

Lydian Nadhaswaram appreciated by AR rahman

by Sakthi, Mar 15, 2019, 21:24 PM IST

அமெரிக்காவில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன் 'தி வேல்ட்ஸ் பெஸ்ட்' என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

சென்னை சிறுவன்

அமெரிக்காவில் ' தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்'  என்ற  நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளிலிருந்து  கலைஞர்கள் குழுவாகவும் , தனி நபராகவும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்  ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த சென்னையைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் லிடியன்  தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். அவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இறுதி நிகழ்ச்சியின் போது  இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து நடுவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் லிடியன். இதனைத் தொடர்ந்து அவருக்கு ' தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.  பரிசு தொகையாக 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 7 கோடி) பரிசும் வழங்கப்பட்டது.

சென்னை சிறுவன்

இந்த சிறுவனுக்கு அண்மையில்  கே.எம். மியூசிக் அகாடமியில் ஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.  உலகிலேயே சிறந்த பியானிஸ்ட் ஆக வேண்டும் என்பதே  லிடியனின் ஆசையாம்!

 

 

You'r reading உலகை திரும்பிப் பார்க்க வைத்த சென்னை சிறுவன்! – பாராட்டு விழா எடுத்த ஏ.ஆர் ரஹ்மான் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை