நிச்சயதார்த்தம் முடிந்ததும் விஷால் பதிவிட்ட நெகிழ்ச்சி ட்வீட்

நடிகர் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடந்தது. அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்த அனிஷா விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

விஷால் அனிஷா

இரண்டு மாதங்கள் முன்னர் தங்கள் காதல் செய்தியை விஷால் ட்வீட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இவர்களின் நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சி, நந்தா, ரமணா ஸ்ரீமன் மற்றும் பசுபதி உள்ளிட்டோர் இந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்றனர்.

விஷால்

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்தபிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் முன்னர் சவால் விடுத்திருந்தார். தற்போது கட்டிட பணிகள் இறுதிகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில் ஆகஸ்டு மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் தங்கள் திருமணம் நடக்கும் என்று விஷால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிச்சயதார்த்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்த விஷால், ``அனிஷா தான் என் மணமகள். மகிழ்ச்சியாகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன். ஐ லவ் யூ அனிஷா’’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்