‘கண்ணாடி’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார் துருவங்கள் பதினாறு இயக்குநர்.
2016ல் ரகுமான் நடிப்பில் வெளியான படம் ‘துருவங்கள் பதினாறு'. கிரைம், திரில்லர் கதை கோணத்தில் உருவாகப்பட்ட இந்த படத்தை கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் கார்த்திக் நரேன்.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது துருவங்கள் பதினாறு. இதை அடுத்து, அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் 'நராகசூரன்' என்ற படத்தை இயக்கினார் கார்த்திக் நரேன். படப்படிப்பு முடிவடைந்த நிலையில் சில காரணங்களால் இன்னும் ரீலிஸ் ஆகாமல் இருக்கிறது.
இந்நிலையில், கார்த்திக் நரேன் நடிகராக தமிழ் திரை உலகில் அறிமுகமாக உள்ளார். `யாருடா மகேஷ்' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் 'கண்ணாடி' என்கிற படத்தில் கார்த்திக் நரேன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழியில் உருவாகும் இப்படத்தை கார்த்திக் ராஜூ இயக்குகிறார்.