அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் எப்படி இருக்கும்.. ஒரு கெத்தான ஸ்பெஷல் லுக்

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட திரைப்படமான அவெஞ்சர்ஸ் சீரிஸின் நான்காம் பாகமான, அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் வெளியாக இருக்கிற சூழலில் படத்தின் அறிமுக வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

நம் ஊரில் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை மாதிரி தான், ஹாலிவுட்டிலும் டிசியும், மார்வெலும் எதிரும் புதிருமானவர்கள். பேட்மேன், ஒண்டர் வுமன் என்று டிசி வெளியிட்டா, அந்தப் பக்கம் ஸ்பைடர் மேன், ஆண்ட் மேன் என மார்வெல் ஒரு கைபார்க்கும். ஆனால் இறுதியில் மார்வெல் டீம், அவெஞ்சர்ஸ் பாத்தை இறக்கிவிட்டு, ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும். இப்போதைக்கு ஹாலிவுட் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் படம் தான். முன்னதாக 2018ல் வெளியான படங்களில் உலகமுழுக்க சக்கைபோடு போட்ட ஹாலிவுட்படங்களில் ஒன்று ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’. ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களை தயாரிக்கும் மார்வெல் நிறுவனம் பிரம்மாண்டமா தயாரிச்சிருந்த இந்த படத்துக்கு இந்தியாவிலும் ஏகபோக வரவேற்பு. இதைக் கருத்தில் கொண்டு, மார்வெல் நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்தின் புரமோஷன் வேலைகளில் இறங்கியிருக்கிறது.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

சமீபத்தில் படத்தின்  இயக்குநர் ஜோ ரஸ்ஸோ இந்தியா வந்திருந்தார். அதே சமயம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இந்திய மார்வல் ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஆந்தமும் வெளியிடப்பட்டது. இந்தி மொழியில் வெளியான அந்த பாடல் உலகம் முழுக்க வைரலானது.

அடுத்த கட்டமாக, மார்வெல் நிறுவனம் இப்பொழுது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் ஸ்பெஷல் லுக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் அவெஞ்சர் படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகமாகியிருக்கிறது. வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது அவெஞ்சர்.

Avengers  Endgame  Special Look:

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds