உறியடி 2, மோடி பயோபிக்... கெத்துகாட்டும் இந்த வார ரிலீஸ் லிஸ்ட்

week end movie release list

by Sakthi, Apr 4, 2019, 11:20 AM IST

ஒரு பக்கம் பரபர தேர்தல் நிகழ்வுகள் நடந்துவந்தாலும், வாரா வாரம் பட வெளியீட்டில் எந்த குறைவும் வைக்காது திரையுலகம். தமிழ், இந்தி மற்றும் ஹாலிவுட் என இந்த வாரம் வெளியாகும் படங்கள் குறித்த சின்ன முன்னோட்டம் இதோ...!

வீக் எண்ட் படங்கள்

நட்பே துணை:

மீசைய முறுக்கு படத்தைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் இரண்டாவது படம் நட்பே துணை. பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் ஆதி நடித்து, இசையமைத்திருக்கிறார். ஆதிக்கு ஜோடியாக அநகா இப்படத்தில் அறிமுகமாகிறார். கருபழனியப்பன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். இப்படம் வியாழக்கிழமையான (ஏப்ரல்-4) இன்றே வெளியாகிறது.

குப்பத்துராஜா:

நடன இயக்குநரும், தனுஷின் நண்பருமான பாபா பாஸ்கர் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் படம் குப்பத்துராஜா. ஜி.வி.பிரகாஷ் இப்படத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசையும் இவரே. யோகிபாபு, பார்த்திபன், பூனம் பஜ்வா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெளியாகிறது.

உறியடி 2

உறியடி படத்தின் மூலமாக கோலிவுட்டுக்கு இயக்குனராவும் நடிகராகவும் அறிமுகமாவர் விஜயகுமார், 2016ல் வெளியான அந்தப் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைக்கவே, தற்பொழுது இரண்டாம் பாகமும் தயாராகிவிட்டது. இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்களில் அதிக எதிர்பார்ப்பும், கவன ஈர்ப்பும் இந்தப் படத்துக்கு தான். சாதிய கொடுமைகளுக்கு எதிரான சாட்டையடியாகவும், அரசியல் பேசும் படமாகவும் உறியடி 2 இருக்கும். படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னோட்ட வீடியோவில் “சமூகத்தின் சமநிலை தவறும்போதெல்லாம் சகலமும் அவலமாகும், மனிதத்தன்மை கேள்விக்குறியாகும். பொறுமை காத்தால் உடமை பறிபோகும், உரிமை காக்க போரடுவதே கடமை. அரசியல்ல நாம தலையிடனும், இல்லாட்டி அரசியல் நம்ம வாழ்க்கைல தலையிடும்” போன்ற பரப்பரப்பான வசனங்களுடன் வெளியானது குறிப்பிடத்தக்கது. படத்தின் சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்றிருப்பது கூடுதல் தகவல்.

பி.எம்.நரேந்திரமோடி

இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகியிருக்கும் படம் பாலிவுட் திரைப்படம் பி.எம்.நரேந்திரமோடி. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி இப்பொழுது நம் எல்லோர் மனதிலும் இருக்கும். நாட்டின் மிக முக்கிய தருணமான நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் நரேந்திர மோடியின் பயோபிக் படமான ‘பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு படத்தை ஏப்ரல் 12ல் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தேர்தல் 11ஆம் தேதி தொடங்குவதால், படத்தை ஒரு வாரம் முன்னதாக, அதாவது ஏப்ரல் 5ல் வெளியிடவிருக்கிறது. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்பதை டிரெய்லரில் சொல்லிவிடுகிறார்கள். இப்படத்தில் நரேந்திர மோடி விவேக் ஓபராய் நடித்துள்ளார். மோடியின் ஆட்சிக் காலமான 2014 முதல் தற்பொழுது வரை இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மோடியின் இளமை காலம், எப்படி அரசியலுக்குள் வந்தார் என மோடியின் வாழ்க்கையை குறித்த ஒரு படமாக இது உருவாகியுள்ளது. தேர்தலுக்கு முன்னாடியே வருவதால், இந்தப் படம் ஒரு பெரிய அலையை மக்கள் மனதில் ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

ஷசாம்:

டிசி காமிக்ஸின் மற்றுமொரு சூப்பர் ஹீரோ படம் தான் ஷசாம். சிறுவனான பில்லி, மந்திரவாதி ஒருவனைச் சந்திக்கிறான். அந்த மந்திரவாதி இவனை சூப்பர் ஹீரோவாக மாற்றிவிடுகிறான். குட்டிப் பையன் பில்லி, ஷசாம் என்று சொல்லும் போதெல்லாம் ஆறு அடி உயர சூப்பர் ஹீரோவாக மாறிவிடுகிறான். இதுதான் கதை. ஒரு சிறுவன் சூப்பர் ஹீரோவாக மாறினால் எப்படியிருக்கும் என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறது இப்படம். குட்டிப்பையன் சூப்பர் ஹீரோவாகி, எதிரிகளை அழிச்சு உலகத்தை காப்பாத்துறதோடு படம் முடியும். இந்த கதையைக் கேட்டதும், தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடித்த நியூ படம் மனதுக்குள் வந்து போவதை தவிர்க்கமுடியாது. இந்தப் படத்தை ஹாரர் படங்களான லைட்ஸ் அவுட், அனபெல்; கிரியேஷன் படங்களை இயக்கிய டேவிட் செண்ட்பெர்க், இந்த முறை காமெடி படத்தை இயக்கியிருக்கிறார். ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் டப் செய்து வெளியிடுகிறது டிசி. இந்த வாரத்துக்கான ஒரு ஜாலி சூப்பர் ஹீரோ படம் பார்க்க பெஸ்ட் சாய்ஸ் ஷசாம்.

You'r reading உறியடி 2, மோடி பயோபிக்... கெத்துகாட்டும் இந்த வார ரிலீஸ் லிஸ்ட் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை