ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ஆசை.. தோர் நடிகரின் கனவு நிறைவேறுமா?

மார்வெல் உலகின் தோர் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

மார்வெல் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில் தோர் நடிகராக நடித்துள்ளவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். எண்ட்கேம் படத்திற்கான புரமோஷன் பணிகளில் அவெஞ்சர்ஸ் டீம் பிசியாக ஈடுபட்டு வருகிறது. 24 மணி நேரமும் ஏதோ ஒரு தொலைக்காட்சிக்கோ, பத்திரிகைக்கோ பேட்டி அளித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் படம் வெளியாகவுள்ளதால், விமானத்தில் பறக்கும் போது பேட்டி கொடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் எண்ட்கேம் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்திடம், உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் என்ன? எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

அதற்கு பதிலளித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், தனக்கு 007 படங்கள் மிகவும் பிடிக்கு என்றும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும் கூறினார். இதற்காக கடந்த 2013-ம் ஆண்டில் தான் நடித்த ஸ்பொர்ட்ஸ் படமான ரஷ் படத்தை 007 டீமுக்கு ஆடிஷன் சிடியாக அனுப்பியும் உள்ளதாக கூறினார்.

ஆனால், இதுவரை ஆடிஷனுக்கான கால் தனக்கு வரவில்லை என்றும், வருங்காலத்தில் வந்தால் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறியுள்ளார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்