எனது குடியுரிமை குறித்து ஏன் தோண்டுகிறீர்கள்? ஆவேசப்பட்ட அக்ஷய் குமார்!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கனடா நாட்டை சேர்ந்தவர் என்றும் இந்தியா மற்றும் கனடா என இரட்டை குடியுரிமைகளை வைத்துள்ளவர் எனவும் சிலர் அவ்வபோது அவரது குடியுரிமை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இது வைரலாக பரவ, கடுப்பான அக்‌ஷய் குமார், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், எனது குடியுரிமை பற்றி இங்கே சிலர் தேவையில்லாமல் தோண்டுகின்றனர். நான் எப்போதும், எனது குடியுரிமை குறித்த உண்மையை மறைத்தோ அல்லது எனது கனடா பாஸ்போர்ட்டை மறைத்தோ வாழவில்லை. இது எந்த அளவுக்கு உண்மையோ அதே போல கடந்த 7 ஆண்டுகளில் நான் கனடாவிற்கு செல்லவே இல்லை என்பதும் உண்மையான விஷயம். மேலும், இந்தியா மீதான எனது அன்பையும் தேச பற்றையும் யாராலும் பிரிக்க முடியாது. அதனை யாருக்கும் நிரூபிக்கும் அவசியமும் எனக்கு கிடையாது. ஆனால், தேவையில்லாமல் சில பல காரணங்களுக்காக அவ்வப்போது எனது குடியுரிமை குறித்து இங்கு எழுப்பப்படும் விமர்சனங்கள் எனக்கு சங்கடத்தை ஏற்படுகின்றன. என்னால் இயன்ற வரை இந்தியாவிற்கான எனது அர்ப்பணிப்புகளை செய்து அதனை மேலும் வலிமையாக்க பாடுபடுவேன் என அக்‌ஷய்குமார் நீண்ட பெரிய பதிவினை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், நடிகர் அக்‌ஷய் குமார் மோடியுடன் பேட்டி எடுத்த நிலையில், அதனை தொடர்ந்து, அக்‌ஷய் குமாரின் கனடா குடியுரிமை குறித்த சர்ச்சையை சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
More Cinema News
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
mammootty-collaborates-with-director-ram-again
பேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...
keerthy-suresh-turns-down-rana-daggubatis-film
கீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
international-cricketer-tweets-about-thalapathys-bigil-trailer
விஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..
actress-andreajeremiah-worried-about-film-offer
படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..
Tag Clouds