ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் புதிய டிரைலர் ரிலீஸ்!

Once Upon a Time in Hollywood Movie New trailer released

by Mari S, May 22, 2019, 09:52 AM IST

குவெண்டின் டரண்டினோவின் 9வது படமான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல ஹாலிவுட் இயக்குநரான குவெண்டின் டரண்டினோ, தான் மொத்தம் 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் வெளியான 8 படங்களும் உலகளவில் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 9வது படமான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தை டரண்டினோ இயக்கியுள்ளார். அந்த படம் வரும் ஜூலை 26ம் தேதி ரிலீசாகிறது. அந்த படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

1962களில் ஹாலிவுட் சினிமா எப்படி இருந்தது என்பதையும் ஒரு ஹீரோவுக்கும், ஒரு டூப் கலைஞருக்கும் ஏற்பட்ட மோதல்கள் குறித்த கதைக்களத்துடன் இந்த படத்தை டரண்டினோ உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் நாயகனாக லியார்னடோ டி காப்ரியோ நடித்துள்ளார். அவரது டூப் நடிகராக பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்துள்ளார்.

இருவரது அபாரமான நடிப்புத் திறமையில் வெளியாகவுள்ள இந்த படத்தைக் காண உலக சினிமா ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் புரூஸ்லி கதாபாத்திரத்தையும் இயக்குநர் ரீ-க்ரியேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் புதிய டிரைலர் ரிலீஸ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை