மோடிக்கு வாழ்த்து சொன்ன ஃபேக் ஐடியை வெளுத்து வாங்கிய பிரியா பவானி சங்கர்!

by Mari S, May 24, 2019, 16:02 PM IST

மான்ஸ்டர் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கருக்கு கடந்த சில நாட்களாக எலி தொல்லையை விட மோசமான ஃபேக் ஐடி ஒன்று டார்ச்சர் கொடுத்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்னதாக, தனது பெயரில் ஃபேக் ஐடி பயன்படுத்தும் நபரை கண்டித்து பிரியா பவானி சங்கர் ட்வீட் பதிவிட்டு இருந்தார். அதில், அடுத்தவர் போல ட்வீட் செய்து தொல்லைக் கொடுக்க வேண்டாம் என கண்டித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி ஜெயித்ததற்கு ஃபேக் ஐடியில் இருந்து நிரந்தர பிரதமர் மோடி வாழ்க என ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

இதனை கண்டு கடுப்பான, நடிகை பிரியா பவானி சங்கர், ”அப்படியே பிரதமர் மோடிக்கும் ஒரு போலி அக்கவுண்ட் க்ரியேட் பண்ணிட்டா, பிரதமர் மோடி மாதிரியே ட்வீட் போடலாம்ல, உங்க சொந்த கருத்த என் பெயரை யூஸ் பண்ணி ஏன் திணிக்கிறீங்க என மீண்டும் கடுமையாக கண்டித்துள்ளார்.

சீக்கிரமே பிரியா பவானி சங்கருக்கு ப்ளூ டிக் கிடைத்து விட்டால், இந்த ஃபேக் ஐடி தொல்லையில் இருந்து தப்பித்து விடலாம்.


More Cinema News