விஜய் சேதுபதியின் காதலர் தின பரிசு.. உள்ளே..

Feb 13, 2018, 19:01 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஜூங்கா படத்தில் இருந்து பாடல் ஒன்றை பரிசாக வெளியிட முடிவு செய்துள்ளார்.

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ஜூங்கா. இதில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு, இயக்குனரும் ஹீரோவும் ஒன்று சேர்ந்துள்ள ஜூங்கா படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

‘வனமகன்’ படத்தில் ஹீரோயினாக நடித்த சயிஷா தான் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி போட்டுள்ளார். இந்தப் படத்தை தயாரித்துள்ள விஜய் சேதுபதி காதலர் தினத்தை முன்னிட்டு, ‘ஜூங்கா’ படத்தில் இருந்து பாடல் ஒன்றை ரலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

சித்தார்த் விபின் இசையில், சத்ய பிரகாஷ் மற்றும் ரரினா ரெட்டி இருவரும் பாடிய ‘கூட்டிப்போ கூடவே’ என்ற பாடலை நாளை காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்ளுக்கு பரிசு அளிக்கும் வகையில் ரிலீஸ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading விஜய் சேதுபதியின் காதலர் தின பரிசு.. உள்ளே.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை