பயில்வானாக மாறிய கிச்சா சுதிப் ரணகளப்படுத்தும் டிரைலர்!
Kicha Sudeep Bayilwaan Tamil Trailer Released
நான் ஈ படத்தில் அசத்தல் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப். பின்னர், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். பாகுபலி படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள பயில்வான் திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கபீர் துஹான் வில்லனாக மிரட்டுகிறார். நாயகியாக ஸ்வப்னா நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் இந்த படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி ரிலீசாகவுள்ளது.
More Cinema News
READ MORE ABOUT :