2020 சம்மரிலே சரவெடி தளபதி 64 மாஸ் அப்டேட்!

by Mari S, Aug 24, 2019, 19:34 PM IST

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்ற மாஸ் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.

பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், அடுத்த சரவெடிக்கு விஜய் ரசிகர்கள் அடுத்த ஓராண்டு காக்க தேவையில்லை. மேலும், சோனி மியூசிக் இந்த படத்திற்கு மியூசிக் பார்ட்னராக இணைந்துள்ளது.

கத்தி படத்திற்கு பிறகு அனிருத் தளபதி 64 படத்திற்கு இசையமைக்கிறார். மெர்சல், சர்கார் மற்றும் பிகில் என தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் மூன்று படங்களுக்கு இசையமைத்த நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் என்றும் டான் ஸ்டோரியாக இருக்கும் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.


Leave a reply