பாலிவுட் நடிகைகளையே தூக்கி சாப்பிட்ட கண் சிமிட்டி பிரியா பிரகாஷ் வாரியர்

பாலிவுட் நடிகைகள் சன்னி லியோன், கத்ரீனா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை ஓரம் கட்டி கூகுள் தேடலில் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் முதலிடத்தில் உள்ளார்.

கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்திற்காக எடுக்கபட்ட மாணிக்ய மலரேயா பூவி என்ற பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது. ஒமர் லுலு இயக்கத்தில் ஒரு அடார் லவ் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

இந்த பாடலுக்கும் ஷான் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். நடிகர்-தயாரிப்பாளர் - இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் இந்த பாடலைப் பாடி உள்ளார். இந்த பாடலை விட இந்த பாடலில் நடித்து உள்ள பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவுகள் சமூக வலைதளங்களில் கண்ணாபிண்ணாவென வைரல் ஆனது.

கேரளாவின் திருச்சூரை சொந்த ஊராக கொண்ட பிரியா பிரகாஷ் வாரியர் அங்குள்ள விமலா கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். அவர், ஏற்கனவே மோகினியாட்டம் பயின்றுள்ளார். மேலும், பாடுவதிலும் ஆர்வம் கொண்ட அவர் ஓவர் நைட்டில் பிரபலம் ஆகியுள்ளார்.

இதனால் அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ அப்லோடு செய்த 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்களை பெற்றது. கேரளா மட்டும் இன்றி நாடு முழுவதும் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். அதேபோல, தற்போது வரை 30 லட்சம் பேர் பின் தொடர்பவர்களாக உள்ளனர்.

இந்நிலையில், தற்போது கூகுள் தேடலில் பிரபலமாகி உள்ளார் பாலிவுட் நடிகைகள் சன்னி லியோன், கத்ரீனா கைப் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரை ஓரம் கட்டி உச்சத்தைத் தொட்டுள்ளார். இதே போன்று யூடியூப் தேடலிலும் பிரியா வாரியர் முன்னிலையில் உள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds