பாலா இஸ் பேக்..! - நாச்சியார் விமர்சனம்

பாலுமகேந்திரா இட்ட விதைகளில் ஆலமரமாக விருட்சமடைந்த ஒரு படைப்பாளி பாலா. ஆனால், ‘பிதாமகனு’க்குப் பிறகு ஏனோ அவரின் ஸ்பார்க் குறைந்திருந்தது. ‘தாரை தப்பட்டை’க்குப் பின்னர் பாலா தேய்வழக்காகிவிட்டார் என்றே தோன்றியது. ஆனால், ‘நாச்சியார்’ மூலம் தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்து மாஸ் கம்-பேக் கொடுத்துள்ளார்.

18 வயதை எட்டாத மைனர் பெண் அரசி, கர்ப்பம் தரிக்கிறாள். ‘மைனர் ரேப் கேஸாக’ பதிவு செய்யப்படுகிறது. அரசியுடன் காதல் வயப்பட்டு சுற்றித் திரிந்த காத்து என்கிற காத்தவராயன்தான் இதற்குக் காரணம் என்று தெரியவருகிறது. இதை காத்துவும் மறுக்காமல், ‘என் லவ்வரையும் கொழந்தையையும் என்னோட சேர்த்து வைங்க’ எனக் கதறுகிறான். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார், வழக்கை விசாரிக்கும் நாச்சியார் ஐ.பி.எஸ்.

‘மைனர் ரேப் கேஸ்’ என்பதால் அரசியை தன் அரவணைப்பில் வைத்துப் பார்த்துக் கொள்கிறார் நாச்சியார். காத்து சிறார் சிறைக்கு அனுப்பப்படுகிறான். இருவரையும் இணைத்து வைப்பதில் தீவிரமாக செயல்படும் நாச்சியாருக்கு, அரசி பெற்ற குழந்தையின் டி.என்.ஏ மாதிரி ரிசல்ட் அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்த ட்விஸ்ட் எப்படி கட்டவிழ்க்கப்படுகிறது என்பதையே தன் பாணியில் மிக நேர்த்தியான திரைமொழியில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா.

படத்தின் முதல் சில நிமிடங்களில் முழு கறுப்பு உடையில் வந்து, தனக்குக் கீழே பணி புரிபவர்களை (குறிப்பாக ஆண்களை) அதட்டும் விதமாகட்டும், தவறு செய்பவர்களுக்குப் பதவியை துச்சமென நினைத்து நேரடியாக தண்டனை கொடுப்பதாகட்டும், நேர்மையற்ற உயர் அதிகாரிகளை எதிர்கொள்ளும் விதமாகட்டும் ‘நாச்சியார்’ ஆக ஜோதிகா மிளிர்கிறார். ஜோதிகாவின் ரீ-என்ட்ரியில் இந்தப் படம் என்றென்றும் முக்கிய இடத்தைப் பிடித்து நிற்கும்.

காத்துவாக வரும் ஜி.வி.பிராகஷுக்கு ‘பாலா படம் கிடைத்ததெல்லாம் அபூர்வம்’ என்று பேசப்பட்டது. ஆனால், பாலாவுக்கு ஜி.வி.பிராகஷ் கிடைத்தது அபூர்வம் என்று பேசும் அளவுக்கு நடிப்பில் பின்னியுள்ளார். ஒரு பதின் பருவ ஆணாக, வெகுளித்தனமானக் காதலனாக, குழந்தையைக் காண ஏங்கும் தந்தையாக எனக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் ஸ்கோர் செய்கிறார் ஜி.வி.பிரகாஷ். நாச்சியார் என்று பெயர் வைக்கப்பட்டாலும், காத்துதான் நிலையாக நிற்கிறார் படம் முழுவதும்.

அரசி கேரக்டரில் நடித்திருக்கும் இவானாவை, இனி நிறைய படங்களில் ஹீரோவுக்கு தங்கையாகவும், பின்னர் ஹீரோயினாகவும் பார்க்கக்கூடும். காத்துவுக்கும் - அரசிக்கும் இடையில் முதல் பாதி முழுவதும் வரும் ரொமான்ஸ் காட்சிகள், தமிழ் சினிமாவில் வெகு நாள் கழித்து அடிக்கும் சாரல் மழை.

இசை - ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா என்று டைட்டிலில் போடப்பட்டது. ஆனால், அதற்கான சுவடு ஓர் இடத்தில் கூட இல்லை என்பது படத்தின் மிகப் பெரிய ஏமாற்றம். ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவை படத்திற்கு தேவையானதை கொடுத்திருக்கின்றன. முக்கிய கதாபாத்திரங்கள் அன்றி, சைட்-கேரக்டர்களும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதால், படத்தில் துறுத்தல் காட்சிகள் மிகக் குறைவு. ஒன்றிரண்டு இடத்தில் சில பாலா க்ளீஷேக்களை எடுத்துவிட்டால், அவரின் மாஸ்டர்-பீஸ்களில் நாச்சியாரும் இணைந்திருப்பாள். சில குறைகள் இருந்தாலும் அழுத்தமான, தெளிவான திரைக்கதையால் பாலாவின் நாச்சியார் கர்ஜிக்கிறாள்.

- பரத்ராஜ்.ர

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :