பிரியா பவானி சங்கர் காட்டில் பட மழை!

by Mari S, Sep 21, 2019, 21:09 PM IST

நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் தற்போது அரை டஜனுக்கு மேலான திரைப்படங்கள் இருக்கின்றன.

டிவி சீரியல் நடிகையாக வலம் வந்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக அப்டேட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் கதாபாத்திரத்தில் அத்தை மகள் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்தார்.

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் கொடுத்துள்ளது.

மான்ஸடர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மாஃபியா, என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.

இந்நிலையில், தற்போது நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகவும் புதிய படமொன்றில் பிரியா பவானி சங்கர் கமீட் ஆகியுள்ளார்.

ஜெர்சி படத்தின் ரீமேக் மற்றும் எஃப்.ஐ.ஆர்., படங்களை தொடர்ந்து இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் புதிய படத்தில் தான் விஷ்ணுவுக்கு பிரியா பவானி சங்கர் ஜோடி ஆகிறார்.

இயக்குநர் செல்லா அய்யாவு, ஏற்கனவே விஷ்ணு விஷாலை வைத்து சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


More Cinema News