ரஜினியின் தர்பாருடன் மோதும் விஜய், விஷால் படங்கள்..

by எஸ். எம். கணபதி, Sep 27, 2019, 11:54 AM IST

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படத்துடன், நடிகர் விஜய், விஷால்் படங்களும் போட்டி போட்டு வெளியாகின்றன.

டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய் தனது பிகில் படத்திற்கு அடுத்தபடியாக மாநகரம் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படமும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனால், பொங்கலன்று ரஜினி படத்துடன் விஜய் படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த போட்டியில் விஷால் படமும் இணையப் போகிறது. விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோரின் நடிப்பில் புது டைரக்டர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அடுத்த ஆண்டு பொங்கலன்று இன்னும் ஓரிரு படங்களும் திரைக்கு வரலாம். எனவே, ரசிகர்கள் மத்தியில் பொங்கல் திரைப்படப் போட்டி பலமாக இருக்கும்.


Leave a reply